ஊட்டியில் கனமழை
தமிழகத்தில் நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் அதிகாலையில் இருந்து மேகமூட்டத்துடன் காலநிலை காணப்பட்டது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் சேரிங்கிராஸ், மார்க்கெட், மத்திய பேருந்து நிலையம் அதைபோல் கோத்தகிரி கட்டபெட்டு, அரவேனு , டானிங்டன், ஒரசோலை அதன் சுற்றுப் வட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக நகர்ப்புறத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
முடங்கிய சுற்றுலா பயணிகள்
கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த உதகை மற்றும் கோத்தகிரியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சுற்றுலாப் பயணிகள் தொடர் மழை காரணமாக தங்கும் விடுதிகளில் முடங்கியுள்ளனர்.