நாகையில் 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நாகையில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
நாகையில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
Fengal Cyclone: மீட்பு பணி - தயார் நிலையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் - AC ஜெகதீசன்
தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 30ம் தேதி கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபெங்கல் புயலாக வலுப்பெற்று சென்னை - புதுச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்பு.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்பு
ராமநாதபுரத்தில் பெய்த கனமழை காரணமாக, பட்டாலியன் குடியிருப்புகளில் மழை வெள்ளத்தால் சூழப்பட்டதால், 90 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கொட்டும் மழையில் கடல் அலையை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.
பாம்பன் அருகே தோப்புக்காடு பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மீனவர் குடிசைகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
நாகை மாவட்டத்தில் தொடர் கனமழையால் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பழமையான மரம் வேரோடு சாய்ந்தது
இன்று உருவாக உள்ள புயலுக்கு சவுதி அரேபிய அரசு பரிந்துரை செய்துள்ள ஃபெங்கல் என பெயர் வைக்கப்பட உள்ளது.
திருச்சியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவு
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. சன்னதி கடற்கரை பகுதியில் வழக்கத்தைவிட கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தெற்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக மாற்றம் அடையவுள்ளதை அடுத்து, சென்னையில் பரவலான மழை பெய்து வருகிறது.
சிவகங்கை மாவட்டம் மேலபசலை கிராமத்தில் கால்வாய் உடைந்து 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் அவதி அடைந்துள்ளனர்.
கனமழை காரணமாக நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் காரணமாக நாகை மாவட்டத்தில் நாளை (நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட்டை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது - இந்திய வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.