தலைநகர் டெல்லியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
பல்வேறு பகுதிகளில் கனமழை
கனமழையால் கடுமையான வெப்பம் மற்றும் அதிக மாசுபாட்டிலிருந்து மக்கள் விடுப்பட்டுள்ளனர். இந்த தொடர் மழையால் இந்தியா கேட், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், மண்டி ஹவுஸ், துக்ளக் சாலை மற்றும் நகரின் பல பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் நொய்டா மற்றும் காசியாபாத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது.
கனமழையால் முன்னால் வரும் வாகனங்கள் தெரியாமல் இருப்பதால் கார்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு ஓட்டிச் செல்வதை காணமுடிகிறது. டெல்லிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இடியுடன் கூடிய மிதமான மழை (மணிக்கு 5-15 மிமீ) பெய்யும் என்று கணித்துள்ளது.
ஆரஞ்சு எச்சரிக்கை
கனமழையால் காரணமாக மழைநீர் தேங்கியுள்ளதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மகாமாயா மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலை ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அம்பேத்கர் பூங்காவிற்கு அருகிலுள்ள சாலையும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மோசமான வானிலை நிலவுவதால் டெல்லி விமான நிலையம் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி விமான நிலையம் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், "உங்கள் பயணம் தொந்தரவில்லாமல் இருப்பதை உறுதிசெய்ய எங்கள் களக் குழுக்கள் விடாமுயற்சியுடன் செயல்படுகின்றன. சமீபத்திய தகவலுக்கு, பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல்
தெற்கு டெல்லி, தென்கிழக்கு டெல்லி, மத்திய டெல்லி, தேசிய நெடுஞ்சாலை 8, டெல்லி-ஜெய்ப்பூர் பாதை, ஐடிஓ மற்றும் எய்ம்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஜூன் 29 முதல் டெல்லியின் பருவமழை சராசரியை விட 8 சதவீதம் அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் இதுவரை 234.6 மிமீ மழை பெய்துள்ளதாக ஐஎம்டி தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலின்படி, சஃப்தர்ஜங்கில் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி வரை 8.8 மிமீ மழையைப் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் ரிட்ஜ் நிலையத்தில் 22.4 மிமீ மழையும், லோதி சாலையில் 14.2 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.