K U M U D A M   N E W S

AI

தீப கொப்பரையை மலையில் இருந்து இறக்கும் பணி 

திருவண்ணாமலை தீப மலையில் இருந்து தீப கொப்பரையை கீழே இறக்கும் பணி தீவிரம்

பட்டப்பகலில் நடந்த கொள்ளை.. வழிப்பறியில் ஈடுபட்டவர்களுக்கு காத்திருந்த ஷாக்

பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

திருப்பதி தரிசனத்திற்கு பத்தாயிரம் ரூபாயா..! பக்தர்களிடம் மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல்

திருப்பதில் சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி பெண் மருத்துவரிடம் ஆயிரக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய மோசடி கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். 

கன மழையால் 61 பேர் உயிரிழப்பு

மழையால் 4.77 லட்சம் ஏக்கர் வேளாண் பயிர்களும், 20,896 ஏக்கர் தோட்டக்கலை பயிர்களும் சேதம் - அரசு

மக்களே உஷார் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வரும் 29-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்

அரசு ஊழியர்கள் சொத்து குறித்த விவரம் தனிப்பட்டது அல்ல.. நீதிமன்றம் திட்டவட்டம்

அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ரஜினியுடன் இணைந்து பணியாற்ற ஆசை.. இளையராஜாவுக்கு எந்த அவமதிப்பும் நடக்கவில்லை- தேவா

ஆண்டாள் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எந்த விதமான அவமதிப்பும் நடைபெறவில்லை என்றும் அதனை அவரும் கூறியிருந்தார் என்று இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார்.

வீட்டு உரிமையாளருடன் தகராறு.. தலைக்கேறிய மதுபோதை.. வாகனங்கள் தீ வைத்து எரிப்பு

வீட்டு உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறில் மது போதையில் ஐந்து  இருசக்கர வாகனங்களை தீவைத்து எரித்த வாடகைத்தாரரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

"நெருங்கும் ஆபத்து.." விடிந்ததும் சென்னைக்கு புயல் வார்னிங்

சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 7 துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

பட்டினப்பாக்கத்தில் மீண்டும் ஒரு சம்பவம்.. மேற்கூரை இடிந்து விழுந்து இளைஞர் படுகாயம்

குடிசை மாற்றுவாரிய குடியிருப்பின் பால்கனி இடிந்து விழுந்து இளைஞர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா கடவுளின் தேசம்.. தமிழகம் குப்பைகளின் தேசமா? - சீமான் ஆவேசம்

என் நாட்டின் வளங்களை கேரளாவிற்கு எடுத்து சென்று விட்டு அங்குள்ள குப்பைகளை இங்கு கொட்டுவீர்களா என சீமான் ஆவேசமாக பேசினார்.

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை காணாத ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர்.

''பழனிச்சாமி = துரோகம்" - நீண்ட நாள் அடக்கி வைத்த கோபம் - முதலமைச்சர் பேச பேச மிரண்ட திமுகவினர்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என்னதான் கத்துனாலும், எப்படித்தான் கதறினாலும் அவரோட துரோகங்களும், குற்றங்களும்தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். 

வானிலை நிலவரம்.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி.. திடீரென உள்வாங்கிய வீடால் பரபரப்பு

மெட்ரோ பணிக்காக சுரங்கம் தோண்டும் போது குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மண் அழுத்தம் காரணமாக மாம்பலம் லாலா தோட்டத்தில் இருக்கும் ஒரு வீடு மட்டும் ஒரு சில இன்ச் உள்வாங்கியுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

விஜய் நடித்துக் கொண்டே அரசியல் செய்யலாம்.. நடிகர் நட்ராஜ் கருத்து

நடிகர் விஜய் நடிப்பதை நிறுத்தியது வேதனை அளிப்பதாகவும், அவர் நடித்துக் கொண்டே அரசியல் செய்யலாம் என்றும் நடிகர் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.

கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்.. லாரிகளுடன் வந்த கேரள அதிகாரிகள்! அகற்றும் பணி தீவிரம்

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது.

தி.மு.க செயற்குழுக் கூட்டம் தொடக்கம்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தொடங்கிய செயற்குழு கூட்டம்.

கேரள கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் - மேலும் 2 வழக்குகள் பதிவு

நெல்லை மாவட்டத்தில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் மேலும் 2 வழக்குகள் பதிவு

மெரினாவில் களைக்கட்டும் உணவு திருவிழா.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்

மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் உணவு திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுகளை சுவைத்து மகிழ்ந்தனர்.

R-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுத்தால் 3 சதவிகிதம் சலுகை.. ரயில்வே அறிவிப்பு

R-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும்போது மூன்று சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

விசாரணைக் கைதிகளுக்கு அவசரகால விடுப்பு.. வழிகாட்டு விதிகளை வகுக்க உத்தரவு

விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குகேஷால் நாடே பெருமை கொள்கிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சால்வை அணிவித்து தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

‘விடுதலை -2’ திரைப்படத்தை இதில் வெளியிடக் கூடாது.. நீதிமன்றம் வைத்த செக்

'விடுதலை 2’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெயிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு வழக்கு.. தேவையற்ற கருத்துகளை நீக்க தயார்.. மனுவில் தெரிவிப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தெரிவித்த தேவையற்ற கருத்துக்களை நீக்க தயாராக இருப்பதாக, மேத்யூ சாமுவேல் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.