கோவை திராவிட இயக்கத்தின் கோட்டை
கோவை, சிவானந்தா காலனி பகுதியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவின் நிறைவு நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அப்பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், திக அருள்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் சுயமரியாதை சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கோவையில் சுயமரியாதை மாநாடு நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்தது. கோவை என்றும் திராவிட இயக்கத்தின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
கோவையில் தான் கலைஞர் திரை வாழ்க்கையை துவங்கினார். அண்ணா, பெரியார் சந்தித்தது திருப்பூரில் தான். இங்கு சுயமரியாதை இயக்க மாநாடு நடைபெறுவது பொருத்தமானது. கோவையில் பல பகுதிகளில் கருப்பு சட்டை அணிந்த இளைஞர்களை பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு இன்று அடைந்த முன்னேற்றங்களுக்கு அடித்தளமிட்டது சுயமரியாதை இயக்கம் தான்.
பெரியாரின் கொள்கை பேரனாக...
பெரியார் 100 ஆண்டுகளுக்கு முன்பு பெரும் எதிர்ப்புகளுக்கு இடையே சுயமரியாதை இயக்கத்தை துவங்கினார். பெரியார் தன் வாழ்நாளில் 13 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தவர். அந்த காலத்தில் இந்தளவு சாலை, மின்சார வசதிகள் கிடையாது. 10 ஆயிரத்து 700 பொதுக்கூட்டத்தில் பேசியவர் பெரியார். அவர் 21 ஆயிரத்து 400 மணி நேரம் உரையாற்றி இருக்கிறார். தான் இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு கூட பொதுக்கூட்டத்தில் பேசியவர். தான் கொண்ட கொள்கைக்காக வாழ்நாள் முழுக்க பாடுபட்ட வேறு ஒருவரை உலக வரலாற்றில் எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். பெரியார் மறைந்து 50 ஆண்டுகளுக்கு பிறகும் தமிழ்நாட்டின் அரசியலை அவர் தான் தீர்மானித்து கொண்டு இருக்கிறார்.
தி.மு.க இளைஞரணி செயலாளர், எம்.எல்.ஏ, அமைச்சர், துணை முதலமைச்சர் என்ற பதவிகளை விட உண்மையான பெரியாரின் கொள்கை பேரனாக இங்கு வந்து இருப்பதில் பெருமை கொள்கிறேன். பெரியாருக்கு கிடைத்த தொண்டர்களை போல, வேறு யாருக்கும் கிடைக்க மாட்டார்கள். பெரியாரின் கொள்கைகள் ஒவ்வொன்றாக வெற்றி பெற்று வருகிறது. சட்டமாகவும் மாறி வருகிறது. திராவிட மாடல் ஆட்சியில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் தொழில் முனைவோராக மாறி வருகின்றனர். பெண்கள் படிப்பதற்கு புதுமை பெண் திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் கல்வி உதவித்தொகையாக வழங்கி வருகிறார். பெரியார் சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த போது, பெயருக்கு பின்னால் சாதி பெயர் போடும் பழக்கம் இருந்தது. அவர் மறைந்த போது யாருடைய பெயருக்கு பின்னாலும் சாதி பெயர் போடும் பழக்கம் இல்லை. இது நாட்டில் வேறு எங்கும் இல்லை.
மாநில உரிமையை பறிக்க முயற்சி
தி.மு.க ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் பெரியார் கொள்கைகள் நடைமுறைக்கு வந்து உள்ளது. இதை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் பாசிஸ்ட்கள், வெறி பிடித்து அலைந்து கொண்டு இருக்கிறார்கள். நமது கழகத்தை எப்படியாவது வீழ்த்த வேண்டுமென துடித்துக் கொண்டு இருக்கிறார்கள். கருப்பு, சிவப்பு வேஷ்டி கட்டி உள்ள கடைசி தி.மு.க தொண்டன் இந்த மண்ணில் இருக்கும் வரை பா.ஜ.க வின் இந்த கனவு, என்றைக்கும் பலிக்கவே, பலிக்காது.
தமிழ் பண்பாட்டை, கலாச்சாரத்தை அழிக்க நினைக்கிறார்கள். புதிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தியை திணிக்க முயற்சிக்கிறார்கள். மஹாராஷ்டிரா, கர்நாடகா என இந்தியை எதிர்க்க முதலில் விதை போட்டது தமிழ்நாடு.10 ஆயிரம் கோடி ரூபாய் தந்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது என முதலமைச்சர் கூறினார். நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு தர வேண்டிய ரூ.4 ஆயிரம் கோடி, பேரிடர் நிவாரண நிதி தரவில்லை. நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு மூலம் மாநில உரிமையை பறிக்க முயற்சிக்கிறார்கள்.
இபிஎஸ்ஸை பார்த்து சிரிக்கிறார்கள்
பாசிஸ்ட்டுகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பதால், அவர்கள் கதறுகிறார்கள். ஆனால் பா.ஜ.கவோடு சேர்ந்து அ.தி.மு.கவும் கதறுகிறார்கள். 8 மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி சொன்னார். ஆனால் ஒரேயொரு ரெய்டு நடத்தி அ.தி.மு.க-வை காப்பாற்ற முடியாமல் பா.ஜ.க-வின் காலடியில் விழுந்து கிடக்கும் எடப்பாடி பழனிசாமியை பார்த்து தமிழ்நாடு மக்கள் அனைவரும் சிரித்து கொண்டு இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவை காப்பாற்ற முதலமைச்சர் பணியாற்றி கொண்டு இருக்கிறார்.அதனால் தான் இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது.அதனால் நமது முதலமைச்சர் பெயரை கேட்டால் பயம் வருகிறது. இந்தியாவில் பா.ஜ.க-வை நேருக்கு நேர் நின்று எதிர்க்கும் ஒரே இயக்கம் தி.மு.க தான். அதனால் தான் தி.மு.க வை எப்படியாவது வீழ்த்த வேண்டுமென்று, ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்ற வேண்டுமென்று பாசிஸ்ட்டுகள் என்னென்னவோ கொண்டு வருகிறார்கள்.
அமித்ஷாவின் வேட்டைக்காடு இல்லை
அவர்களுக்கு பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு. கொள்கை என்பது இடுப்பில் கட்டியுள்ள வேஷ்டி என அண்ணா சொன்னதை அவர்களுக்கு நினைவுப்படுத்துகிறேன். தி.மு.கவினர் என்றும் பதவிக்காக கொள்கையை விட்டு கொடுக்காதவர்கள். மாநில உரிமைகளை, மதச்சார்பின்மையை காக்கும் நமது பயணம் உறுதியுடன் தொடர்கிறது. இந்த பயணத்தில் வெற்றி பேற பாசிஸ்ட்டுகளையும், அடிமைகளையும் நாம் வீழ்த்தியாக வேண்டும்.
இது அமித்ஷாவின் வேட்டைக்காடு அல்ல, தமிழ்நாடு என்பதை புரிய வைக்க வேண்டும். அதற்கு 2026 சட்டமன்ற தேர்தல் என்ற போரில் வெற்றி பெற வேண்டும். போர் பாசறையில் வெற்றி பெற வீரர்கள் மட்டும் போதாது, வழிநடத்தும் படை தலைவன் வேண்டும். அத்தகைய முதுகெலும்பு உள்ள படை வீரனாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெறும். அதற்கு கோவையில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெற்றாக வேண்டும். அதற்கு இந்த மாநாடு நல்ல துவக்கமாக இருக்க வேண்டும்” என கூறினார்.