K U M U D A M   N E W S

மாநில கல்விக் கொள்கை ..முதல்வரிடம் அறிக்கை சமர்பித்த குழு.. என்னென்ன சிறப்பம்சம்

மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை டெல்லி நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில்,மாணவர்களுக்கு 3, 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு கூடாது. மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் இருக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்

கொடநாடு கொலை,கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இண்டர்போல் உதவியை நாட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் செய்கூலி, சேதாரமின்றி 40க்கு 40 வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை.. ரூ.10 லட்சம் அபராதம்.. முதல்வர் ஸ்டாலின்

மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன்படி, இனி தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரூ.100 கோடி நில அபகரிப்பு..தலைமறைவான எம்ஆர் விஜயபாஸ்கர்..சிபிசிஐடி லுக் அவுட் நோட்டீஸ்

100 கோடி ரூபாய் நிலத்தை மோசடி செய்து அபகரித்து விட்டதாக எம்ஆர் விஜயபாஸ்கர் மீது புகார் எழுந்துள்ளதை அடுத்து அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள விஜயபாஸ்கர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் தடுக்கும் வகையில் விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து.. 4 பேர் மரணம்.. பலர் படுகாயம்.. முதல்வர் நிவாரணம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தில் செயல்படும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில்,தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

நீட் தேர்வு..திமுகவின் அரசியல் நாடகத்தை நம்ப மாட்டார்கள்.. கொந்தளிக்கும் எடப்பாடி

38 எம்பிக்களை வைத்துக்கொண்டு நீட் ஒழிப்புக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத திமுக, தற்போது 40 எம்பிக்கள் இருந்தும் நாடாளுமன்றத்தில் நீட் குறித்த தீர்மானத்தை கொண்டுவராமல், மீண்டும் 3வது முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதால் என்ன பயன்? என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஓசூரில் விமான நிலையம்.. வெற்று விளம்பரம்.. மிகச்சிறந்த ஜோக் என்கிறார் அண்ணாமலை

சென்னை: வெறும் விளம்பரத்துக்காக, ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்போம் என்று தற்போது மீண்டும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். விமான நிலையம் அமைக்கவிருப்பதாகக் கூறியிருப்பது ஆகச்சிறந்த நகைச்சுவை என்றும் பதிவிட்டுள்ளார்.

சட்டசபையில் அமளி.. ஸ்டாலின் பதவி விலக முழக்கமிட்ட அதிமுக எம்எல்ஏக்கள்..கூண்டோடு வெளியேற்றம்.. சஸ்பெண்ட்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலகக் கோரி சட்டசபையில் முழக்கமிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இன்று ஒருநாள் அவை நடவடிக்கைகளில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் திமுக.. 2026 ஜனவரிக்குள் 75000 பணியிடங்கள்.. சட்டசபையில் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு தயாராகும் வகையில் இப்போதிருந்தே பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின். சட்டசபையில் 110 விதி எண் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,வரும் 2026 ஜனவரிக்கு 75000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தார்.

சட்டசபையில் கலவரம் நடத்த அதிமுக திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் பகீர் புகார்

சட்டசபையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி செய்கிறார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.