TN Agriculture Budget | இன்று தாக்கலாகும் வேளாண் பட்ஜெட் .. எதிர்பார்ப்புகள் என்னென்ன ?
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்
தமிழக பட்ஜெட் குறித்து பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி விமர்சனம் தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட்டுக்கு விசிக எம்.எல்.ஏ சிந்தனை செல்வன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் என்பது ஒரு Historical Budget என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து கடுமையாக விமர்ச்சித்துள்ளார் த.வெ.க. தலைவர் விஜய்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித்துறைக்கு 46 ஆயிரத்து 760 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களின் நலன் கருதி தமிழக அரசே தனது சொந்த நிதியிலிருந்து முக்கிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழக பட்ஜெட்டில், திருக்குறள் மொழிபெயர்ப்பு, மேலும் 8 இடங்களில் அகழாய்வு உட்பட தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு திடங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழக பட்ஜெட்டில் எரிசக்தி துறைக்கு ரூ.21,168 கோடி ஒதுக்கீடு
ரூ.120 கோடியில் 700 பழைய பேருந்துகளை புதுப்பிக்க நடவடிக்கை பட்ஜெட்டில் அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை தமிழக பட்ஜெட்டில் அரசு வெளியிட்டுள்ளது.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
வெற்று அறிவிப்புகளை மட்டும் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் திமுக வெளியிடும் பட்ஜெட் காலியாக இருப்பதில் வியப்பில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக கிட்டத்தட்ட 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிக்குமோ என்று சந்தேகம் எழுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மாணவ மாணவியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை பெற்றிடாத தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். துறை ரீதியாக பல்வேறு அறிவிப்பினை வெளியிட்டு வரும் நிலையில், சென்னை அருகே புதிய நகரம் உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார் நிதியமைச்சர்.
இந்தியப் பெருநகரங்கள் மட்டுமன்றி வெளிநாடுகளிலும், குறிப்பாக சிங்கப்பூர், கோலாலம்பூர் மற்றும் துபாய் ஆகிய நகரங்களில் நடத்தப்பட உள்ள தமிழ்ப் புத்தகக் கண்காட்சிக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் வழங்கும் முறையினை மேம்படுத்தும் வகையில் “முதன்மைச் சுற்றுக் குழாய் திட்டம்” 2423 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார் அமைச்சர்.
தமிழக சட்டப்பேரவையில் திமுகவிற்கு எதிராக பல கேள்விகளை எழுப்பி அமளியில் ஈடுபட்ட அதிமுக வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நடப்பாண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்யத் தொடங்கினார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.
தமிழ்நாடு பட்ஜெட் ஆவணங்களில் இருந்து '₹' சின்னம் நீக்கப்பட்ட நிலையில் இந்த செயல், மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் 2025 - 26 ஆவணங்களில் இருந்து அதிகாரப்பூர்வ ரூபாய் '₹' சின்னத்தை நீக்கியுள்ளதாக திமுக அரசு அறிவித்துள்ளது - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இலச்சினையில் ரூபாய் குறியீடு மாற்றம் செய்யப்பட்டு இருப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இலச்சினையில் 'ரூ' என்ற தமிழ்வார்த்தையை தமிழ்நாடு அரசு முன்னிலைப்படுத்தியிருக்கிறது. ரூபாய் குறியீட்டை மாற்றியது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மார்ச் 15ம் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் வேளாண் நிதிநிலை அறிக்கையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் எல்.இ.டி. திரையின் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி