நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா- பக்திப் பரவசத்துடன் கொடியேற்றம்!
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியும், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வுமான தேரோட்டம், வருகிற ஜூலை 8-ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியும், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வுமான தேரோட்டம், வருகிற ஜூலை 8-ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தாலும், என் வழி தனி வழி என பயணித்துக் கொண்டிருந்த அண்ணாமலை தற்போது எடப்பாடி பழனிசாமியின் வழிக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாமலை ஆற்றிய உரை பாஜக-வினரை மட்டுமல்லாது அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களையும் குஷிப்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
பெரியாரையும், அண்ணாவையும் அவமானப்படுத்தக்கூடிய இடத்திலேயே அதிமுகவும் இணைந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது உண்மையிலேயே அவர்கள் யார் என்பதை காட்டியுள்ளது என கனிமொழி விமர்சனம்
அண்ணாவின் பெயரைத் தாங்கிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், அண்ணாவுக்கும், பெரியாருக்கும் பெரும் அவமானத்தை தேடித் தந்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாகச் சாடியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடத்தை ஒழிப்போம் என்று அண்ணா, பெரியார் படங்களுடன் வீடியோ வெளியானது குறித்து நான் இன்னும் பார்க்கவில்லை, அதனை பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
"தமிழகத்தில் நடக்கும் சமூக விரோத நடவடிக்கைகள் மாய்ந்து போக, முருகனின் வேல் எங்களுக்கு உதவி செய்யும்" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
"முருக பக்தர்கள் மாநாட்டுக்கு யார் தடை ஏற்படுத்த நினைத்தாலும் அதனை தகர்த்தெறியும் சக்தி ஆன்மீகத்துக்கு உண்டு" என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
"ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் பக்தர்களின் உரிமைகளை பறிக்கும் விதம் கட்டண தரிசன முறையை அமல்படுத்தி இருப்பது, திமுக ஆட்சியில் மதச்சார்பின்மை இருக்கிறதா எனும் சந்தேகத்தை எழுப்புகிறது" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜூன்.22-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு 52 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதுத்தொடர்பான முழு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
வார விடுமுறையை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோயிலில் 2 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் 5 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் அண்ணாமலையாரை தரிசிக்க கொட்டும் மழையிலும் நீண்ட காத்திருந்த பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
தங்களுக்கான ஒரு ஒற்றுமைக்கான தளமாக முருகன் மாநாட்டை முருக பக்தர்கள் பார்க்கிறார்கள் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விளக்கம்
கோவை, வெள்ளியங்கிரி மலை ஏறி ஈசனை தரிசிக்க பக்தர்கள் இந்தாண்டு வனத் துறை வழங்கி இருந்த அனுமதி நேற்றுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து, மலை ஏறுவதற்கு இனி அனுமதி வழங்கப்படாது என வனத்துறை அறிவித்துள்ளது.
கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்த ஆந்திர மாநில பக்தர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலையார் திருக்கோவிலில் அக்னி தோஷ நிவர்த்தி விக்னேஸ்வர பூஜை மற்றும் முதல் கால யாகசாலை பூஜையுடன் வெகு விமர்சையாக தொடங்கியது. நாளை மறுதினம் அண்ணாமலையாருக்கும் உண்ணாமலை அம்மனுக்கும் 1008 கலசங்களில் இருந்து புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளதால், ஏராளமான பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கவில்லை என்றும், சமூக வலைதள வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் என்று வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
வெள்ளையங்கிரி மலை ஏறிய திருவண்ணாமலை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த பக்தர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் விழாவையொட்டி கருட வாகனத்தில் எழுந்தருளி வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் சித்திரை மாதம் பெளர்ணமி திங்கள்கிழமை சேர்ந்து வரும் நாளில் மட்டுமே கற்பூர வெளிச்சத்தில் காட்டில் நடைபெறும் கிடா வெட்டு நடந்தது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், 5 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் பக்தர்கள் வாங்கிய பிரசாதத்தில் குட்டி பாம்பு உயிரிழந்து கிடந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா ஐந்தாம் நாள் நிகழ்வான தங்ககுதிரை வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரரை வழிநெடுகிலும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற குடமுழுக்கு திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, கோவிந்தா முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.