குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை...நாடகமாடியது அம்பலம்
திருமணத்திற்கு முன் தன் மனைவிக்கு ஒருவருடன் காதல் இருந்ததும், இதனால் மனைவி நடத்தையில் சந்தேகமடைந்த ஜாவித் தினமும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

சென்னை மண்ணடி லிங்குசெட்டித் தெருவை சேர்ந்தவர் அக்ரம் ஜாவித். இவர் அதே பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜாவித்திற்கும், அவரது உறவினர் பெண்ணான நிலோஃபர் என்பவருக்கும் திருமணம் நடந்து முடிந்து இரண்டரை வயதில் அழகாகவும், வெள்ளையாகவும் பஹிமா என்ற பெண் குழந்தை உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் உள்ள அனைவரும் ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்டிருந்த நிலையில் அக்ரம் ஜாவித் தனது இரண்டரை வயது பெண் குழந்தை பஹிமா உடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
குழந்தை உயிரிழப்பு
சிறிது நேரம் கழித்து திடீரென தனது குழந்தை மயங்கி விழுந்து விட்டதாக தாய் மற்றும் மனைவியிடம் ஜாவித் தெரிவித்துள்ளார். உடனே உறவினர்கள் மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கி கிடந்த குழந்தையை மீட்டு அருகில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததை கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Read more: எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து- ஆன்லைன் சேவைகள் பாதிப்பு
இந்த நிலையில் நேற்று குழந்தை பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. உடனே மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் உயிரிழந்த இரண்டரை வயது பெண் குழந்தை பஹிமா உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நடத்தையில் சந்தேகம்
உடனே போலீசார் குழந்தை உறவினர்கள் மற்றும் தந்தை அக்ரம் ஜாவித் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்ட போது, குழந்தையின் தந்தை முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். முதலில் ஜாவித் குழந்தை தொட்டிலில் படுத்து உறங்கியதாகவும், கீழே இறங்கும்போது தொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கி இறந்துவிட்டதாகவும், இந்த விவரத்தை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தால் தான் அலட்சியமாக இருந்ததாக என் மீது கோபம் கொள்வார்கள் என்ற அச்சத்தில் படுக்கையிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
Read more: தமிழில் குடமுழுக்கு நடத்த அரசாணை.. நா.த.க மனுவிற்கு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!
பின்னர் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தியதில் குழந்தை பஹிமா கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நாடகமாடியதை ஒப்புக்கொண்டுள்ளார். திருமணத்திற்கு முன் தன் மனைவிக்கு ஒருவருடன் காதல் இருந்ததும், இதனால் மனைவி நடத்தையில் சந்தேகமடைந்த ஜாவித் தினமும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
கொடூர தந்தை கைது
மேலும் ஜாவித்தும், அவரது மனைவியும் கருப்பாக இருப்பதால் குழந்தை மட்டும் எப்படி வெள்ளையாக பிறந்தது என்ற சந்தேகம் ஜாவித்துக்கு இருந்து வந்ததுள்ளது.
இதனால் கோபமடைந்த அக்ரம் ஜாவித் குழந்தை பஹிமா கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் ஜாவித் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?






