தமிழ்நாடு

நகை வாங்க Ready-ஆ?..இன்று Gold Price என்ன தெரியுமா?

இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ள நிலையில்,நகை வாங்கும் வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகை வாங்க Ready-ஆ?..இன்று  Gold Price என்ன தெரியுமா?
today gold rate
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம், இறக்கம் கண்டு வரும் நிலையில், சென்னையில் கடந்த 12-ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கும் விற்பனையானது. அதைத் தொடர்ந்து கடந்த 13-ஆம் தேதி சவரன் ரூ.1,13,360-க்கும், ஒரு கிராம் ரூ.14,125-க்கும் விற்பனையானது.

15-ஆம் தேதி சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,12,320-க்கும், கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கும் விற்பனையானது. மேலும், நேற்று (16.09.2026) தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,12,520-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.14,065-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.1,12,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.14,010-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

கடந்த 6 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.