கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. அக்.28-ம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,05,560-க்கும், ஒரு கிராம் ரூ.13,195-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அக்.29-ம் தேதி விலையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் இதே விலையே தொடர்ந்தது.
அதைத் தொடர்ந்து நேற்று (அக்.,31) அதிரடியாக தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. அதன் படி கிராமுக்கு ரூ.155 குறைந்து ஒரு கிராம் ரூ.13,040க்கும், சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,320க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இன்று தங்கம் விலை திடீரென குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.310 குறைந்து ரூ.12,730-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,480 குறைந்து ரூ.1,01,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் சரிவு
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. அதன் படி கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.200க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,480 வரை குறைந்திருப்பது நகை வாங்குபவர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
LIVE 24 X 7









