முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த முதல்வரின் பெரியம்மா.. திடீரென ஏற்பட்ட சோகம்!

முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த முதல்வரின் பெரியம்மா.. திடீரென ஏற்பட்ட சோகம்!

சென்னை நீலாங்கரையில் உள்ள முதியோர் இல்லத்தில் முதலமைச்சர் விஜயின் பெரியம்மா அமல் ராஜசேகரன் காலமானார்.

Author: Christon தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்யின் தந்தையும் பிரபல திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரின் மூத்த சகோதரர் மனைவி அமுல் ராஜசேகர் (92), வயது மூப்பு காரணமாகச் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் காலமானார்.

சென்னை நீலாங்கரையில் இயங்கி வரும் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 92 வயதான அமுல் ராஜசேகர், வயது மூப்பு சார்ந்த உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். முதலமைச்சர் விஜய்யின் பெரியம்மாவான இவரது மறைவு குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமுல் ராஜசேகரின் மகன்கள் வெளிநாட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது மறைவு குறித்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த முதலமைச்சர் விஜய், தனது பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோருடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

வெளிநாட்டிலிருந்து அவரது மகன்கள் சென்னை வந்தடைந்தவுடன், அமுல் ராஜசேகரின் இறுதிச்சடங்குகள் முறைப்படி நடைபெறவுள்ளதாகக் குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.