தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுவடைந்து வருவதால், தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி
தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறுவதற்கான சத்திய கூறுகள் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிதமான மழை
இந்த நிலையில், இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நவம்பர் 1: வடக்கு கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அதேவேளையில், தமிழ்நாட்டின் சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
LIVE 24 X 7










