2026 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக கூட்டணியை விட்டு விலகிய காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைத்து அமைச்சரவையில் பங்குபெற்றுள்ளது. மேலும், வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கூட்டணிக்குள் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் தற்போது தவெக - காங்கிரஸ் மல்லுக்கட்டி வருகிறது.
த.வெ.க - காங்கிரஸ் மோதல்
அடுத்த பிரதமர் யார் என்பதில் த.வெ.க மற்றும் காங்கிரஸ் இடையே காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. த.வெ.க தரப்பில் விஜய் தான் பிரதமர் வேட்பாளர் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த த.வெ.க எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ், "2029-ல் விஜய் தான் நாட்டின் பிரதமர். ராகுல் காந்தியே அவரைப் பிரதமர் நாற்காலியில் அமரவைப்பார்" என்று தெரிவித்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட், "த.வெ.க எம்.எல்.ஏ-க்கள் இன்னும் ரசிகர் மனப்பான்மையிலிருந்து வெளியே வரவில்லை" என விமர்சித்தார். அதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாக்கூர், "ஜோசியக்காரர்களின் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது" எனக் கூறினார். மேலும் ஒருபடி மேலே சென்ற காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார், ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளாவிட்டால் கூட்டணியிலிருந்தும் அமைச்சரவையிலிருந்தும் வெளியேறுவோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.
திமுக கூட்டணிக்குத் திரும்பக் திட்டம்?
பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் த.வெ.க - காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள இந்த உரசலைப் பயன்படுத்தி கூட்டணியின் போக்கை மாற்ற காங்கிரஸ் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோலு தீவிரமாக முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.
'இந்தியா' கூட்டணிக்குள் இணையும் விருப்பம் த.வெ.கவுக்கு இல்லை என்றும், முதலமைச்சர் விஜய்யை மட்டுமே நம்பியிருப்பது காங்கிரஸுக்கு சாதகமாக அமையாது என்றும் அவர் டெல்லி தலைமைக்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க கூட்டணி அரசில் இருந்து வெளியேறி, மீண்டும் திமுகவுடன் காங்கிரஸ் இணைய வேண்டும் என்பதே அவரது முதன்மை வியூகமாக உள்ளது எனக் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தவெக மீது ராகுல் காந்தியும் அப்செடில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் எதிர்கொள்ளும் சவால்
நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விஜய்யின் செல்வாக்கு பாஜகவையோ அல்லது திமுகவையோ பாதிக்கப் போவதில்லை, மாறாக காங்கிரஸையே அதிகம் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை த.வெ.க காங்கிரஸைக் கழற்றிவிட்டால், வேறு வழியின்றி காங்கிரஸ் மீண்டும் திமுகவிடம் தான் செல்ல வேண்டியதாக இருக்கும். வரவிருப்பது நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் திமுகவுக்கும் தேசிய அளவில் ஒரு பிரதமர் முகம் தேவைப்படும். அதனால் மனக்கசப்புகளை மறந்து திமுக - காங்கிரஸ் மீண்டும் இணையலாம் என அரசியல் விமரிசகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இடைத்தேர்தலில் தவெக - காங்., கூட்டணியாக போட்டியிட வாய்ப்பில்லை எனவும் அதனால், திமுகவுடன் பேச முடிவு என்றும் கூறப்படுகிறது.

LIVE 24 X 7