முதலமைச்சர் பேச்சுக்கு பதிலளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்யின் பதிலுரை மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
"கேள்விகளுக்குப் பதிலில்லை"
செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், "தவெக ஆட்சியின் 114 நாட்களில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளதை நாங்கள் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியிருந்தோம். அதற்கு முதலமைச்சர் முறையான விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், 45 நிமிடங்கள் பேசிய முதலமைச்சர், 10 நிமிடங்கள் மட்டுமே காவல்துறை குறித்துப் பேசிவிட்டு, மீதி நேரத்தில் திமுக மீது எவ்வித ஆதாரமுமின்றிப் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
3 நாட்கள் அவகாசம் இருந்தும், ஒரு ஒப்புவித்தல் போட்டி போலவும், சினிமா வசனங்கள் மற்றும் ரீல்ஸ்களுக்காக மட்டுமே அவர் பேசியுள்ளார். எங்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை" என்று சாடினார்.
பேரவைத் தலைவர் மீது விமர்சனம்
தொடர்ந்து பேசிய அவர், "முதலமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்க அவையில் வாய்ப்புக் கேட்கப்பட்ட போது, சபாநாயகர் முதலில் அனுமதி அளித்துவிட்டுப் பின்னர் மறுத்துவிட்டார். இதன் பின்னணியில் முதலமைச்சரின் அழுத்தமா அல்லது அதிகாரிகளின் அழுத்தமா என்று தெரியவில்லை. எங்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாலேயே அவையிலிருந்து வெளிநடப்பு செய்தோம்" எனக் குறிப்பிட்டார்.
"மிசா பற்றி பேச தகுதி இல்லை"
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "சென்னையில் அண்மையில் நடந்த கொலையைப் பற்றிப் பேசாமல், 1970-களின் மிசா மற்றும் சர்க்காரியா கமிஷன் குறித்துப் பேசுகிறார். அமலாக்கத் துறை கூறியவை வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே, அவை நிரூபிக்கப்படவில்லை. மேலும் சர்க்காரியா கமிஷனுக்குப் பிறகு திமுக 3 முறை ஆட்சியைப் பிடித்துள்ளது.
கொடநாட்டில் தனது பட ரிலீஸுக்காக வாட்ச்மேன் வேலை பார்த்தவருக்கு, மிசாவைப் பற்றியோ அல்லது எங்கள் தலைவரைப் பற்றியோ பேச ஒரு சதவீதம் கூடத் தகுதி கிடையாது. முதலமைச்சர் விஜய் அரசியலுக்கு வந்ததே ஒரு விபத்துதான்" என்று கடுமையாக விமர்சித்தார்.
"ஆதாரம் விரைவில் வெளியாகும்"
மேலும், முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் நடைபெற்ற சோதனை மிரட்டலுக்காகச் செய்யப்பட்டது என்றும், அதற்கு அஞ்சப்போவதில்லை என்றும் கூறிய அவர், முதலமைச்சரின் உதவியாளர் விஷ்ணு கனிம வளங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும், அதை விரைவில் வெளியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

LIVE 24 X 7