கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அசன் மவுலானா களமிறங்கினார். அப்போது திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டது தொடர்பாக, 10 நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.
இந்த விளம்பரங்களுக்காகச் செலவிடப்பட்ட ரூ.33 லட்சத்தைத் தேர்தல் செலவுக் கணக்கில் அசன் மவுலானா காட்டவில்லை எனப் புகார் எழுந்தது. இதையடுத்து, தேர்தல் செலவுக் கணக்கைச் சரியாகச் சமர்ப்பிக்காதது குறித்து விளக்கம் கேட்டுத் தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதுதொடர்பாக அசன் மவுலானா அளித்த விளக்கங்களைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு ஏன் அவரைத் தகுதி நீக்கம் செய்யக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. அதன் பின்னரும், கடந்த 2025 ஆகஸ்ட் 14 மற்றும் நடப்பாண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற நேரடி விசாரணைகளில் அவர் ஆஜராகி உரிய விளக்கங்களை அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அனுமதிக்கப்பட்ட ரூ.30 லட்சம் செலவு வரம்பை மீறிச் செயல்பட்டதுடன், உரியக் கணக்குகளையும் தாக்கல் செய்யத் தவறியதாக அசன் மவுலானா மீது தேர்தல் ஆணையம் குற்றம் சாட்டியது.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் செலவுக் கணக்கை முறையாகத் தாக்கல் செய்யாத குற்றத்திற்காக, அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்துத் தேர்தல் ஆணையம் இன்று (செப்.5) உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம், அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் எந்தவொரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

LIVE 24 X 7