திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சனிக்கிழமை (செப்டம்பர் 5) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தீவிர சோதனை நடத்தினர். சென்னையில் மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர், அண்ணா நகர், அபிராமபுரம் உள்ளிட்ட 10 இடங்களிலும், திருச்சி தில்லை நகரில் உள்ள அவரது இல்லத்திலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
"முறைகேடான ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை"
சோதனை நிறைவடைந்த பின் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.என். நேரு பேசுகையில், "டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து இந்தச் சோதனையை அதிகாரிகள் நடத்தினர். இருப்பினும், முறைகேடு நடந்ததற்கான எந்தவொரு ஆவணமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
அலுவலகக் குறிப்புகள் மற்றும் எனது சகோதரரின் வரவு - செலவுக் கணக்கு குறித்த குறிப்புகளை மட்டுமே எடுத்துச் சென்றுள்ளனர். அவற்றுக்கான உரியப் பட்டியலிலும் எங்களிடம் கையெழுத்துப் பெற்றுச் சென்றுள்ளனர். அதிகாரிகளின் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கினோம்" என்று தெரிவித்தார்.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை
மேலும் பேசிய அவர், "ஏற்கனவே அமலாக்கத் துறை தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும் சூழலில், தற்போது புதிதாக இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர். அரசுக்கும் காவல்துறைக்கும் சோதனை நடத்த அதிகாரம் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
சட்டமன்றத்தில் அடிக்கடி ஆளுங்கட்சியை எதிர்த்து கேள்வி கேட்பதால் ரெய்டா? என நிருபர்களே கேட்பது எனக்கு பெருமையாக இருக்கு. அரசியல்ரீதியாக எங்களை மிரட்டி வைப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் பழிவாங்கும் செயலே" என விமர்சித்தார்.

LIVE 24 X 7