தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. 51 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்ற நிலையில், இந்த கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் பேசிய பல்வேறு விவகாரங்கள் அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது.
வழக்கமாக மக்கள் பிரச்னைகள், அரசின் திட்டங்கள், துறை சார்ந்த கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் சட்டப்பேரவை, இந்த முறை குற்றச்சாட்டுகள், பழைய ஆட்சி விவகாரங்கள், ED ஆவணங்கள், மது விற்பனை தொடர்பான புகார்கள், கரூர் கேங், மிசா விவகாரம், பெண்கள் குறித்த பேச்சு என பல்வேறு அரசியல் சர்ச்சைகளுக்கும் முதலமைச்சர் விஜய்யின் பேச்சில் இருந்தது.
“யாரும் ஓடிடாதீங்க!”
இந்த கூட்டத்தொடரில் அதிகம் பேசப்பட்ட விஜய்யின் கருத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுவது, எதிர்க்கட்சியினருக்கு அவர் விடுத்ததாக கூறப்படும் நேரடி சவால்.
தனது பதிலுரையின்போது எதிர்க்கட்சியினர் அவையை விட்டு வெளியேறாமல், “நான் பதிலளிக்கும்போது நேருக்கு நேர் பதில் கேளுங்கள்” என்ற தொனியில் விஜய் பேசிவிட்டு சட்டசபையிலிருந்து வெளியேறினார்.
இதற்கு பதலளித்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எங்களை ஓட வேண்டாம் என்று சொல்லிவிட்டு தற்போது அவர் ஓடிவிட்டாரா என்று கேள்வி எழுப்பினார். இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது நல்ல தயாராக வாங்க என்று முதலமைச்சரை கேலி செய்யும் நோக்கில் பேசியிருந்தார். இதனால் ஏற்கனவே சூடுபிடித்திருந்த ஆளும் கட்சி - எதிர்க்கட்சி மோதல் மேலும் தீவிரமடைந்தது.
ED ஆவணங்கள்... சட்டப்பேரவையில் பரபரப்பு!
இதற்கு முன்பாகவே அமலாக்கத்துறை தொடர்பான ஆவணங்களை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் விஜய் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக மதுபானக் கடைகள் மற்றும் பார் உரிமையாளர்களிடம் “கட்சி நிதி” என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
அரசு அதிகாரம் மற்றும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பணம் வசூலிக்கப்பட்டதாகவும், இதற்காக அரசியல் பிரமுகர்கள் மற்றும் இடைத்தரகர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் திமுகவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆவணங்கள் என்ன சொல்கின்றன? அவற்றில் இடம்பெறும் தகவல்கள் என்ன? என்பது அடுத்தடுத்த அரசியல் விவாதங்களுக்கு காரணமாகியது.
“கரூர் கேங்”... “ரத்தீஷ் யார்?”
விஜய்யின் உரையில் பரபரப்பை ஏற்படுத்திய மற்றொரு அம்சம் “கரூர் கேங்” என அவர் குறிப்பிட்டதாக கூறப்படும் விவகாரம். அரசியல் மற்றும் அரசு நிர்வாகத்தில் ஒரு குறிப்பிட்ட நெட்வொர்க் செயல்பட்டதாக குற்றம்சாட்டினார் விஜய்,
“இந்த கரூர் கேங்கின் தலைவர் யார்?” என்றும் “துபாய்க்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் ரத்தீஷ் என்பவர் யார்?” போன்ற கேள்விகளை எதிர்க்கட்சியினர் முன்னர் வைத்தார். இதன் மூலம் மதுபான விற்பனை, பார் உரிமம் உள்ளிட்ட விவகாரங்களில் அரசியல் தொடர்புகள் இருப்பதாக முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டினார். ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுகள் அனைத்தும் விசாரணை மற்றும் சட்ட நடைமுறைகளின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டியவை என்பதும் முக்கியமானது.
“கட்சி நிதி” என்ற பெயரில் பண வசூலா?
இந்த விவகாரத்தில் எழும் முக்கியமான கேள்வி, “கட்சி நிதி” என்ற பெயரில் உண்மையில் பணம் வசூலிக்கப்பட்டதா? என்பதுதான். அப்படி வசூலிக்கப்பட்டிருந்தால்,
யாரிடம் இருந்து பணம் பெறப்பட்டது? எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது? யார் பணத்தை வசூலித்தார்கள்? அந்தப் பணம் யாரிடம் சென்றது? இதில் அரசு அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டார்களா? அரசியல் தலைவர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா? என்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. முதலமைச்சர் சுட்டிக்காட்டியதாக கூறப்படும் ஆவணங்களின் உண்மைத் தன்மை மற்றும் அவற்றின் சட்டரீதியான நிலை ஆகியவையும் அரசியல் களத்தில் முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது.
சர்க்காரியா கமிஷன்... வீராணம்... பழைய விவகாரங்கள்!
விஜய்யின் பேச்சு தற்போதைய அரசியல் குற்றச்சாட்டுகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. தமிழ்நாடு அரசியலில் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் சர்க்காரியா கமிஷன் விவகாரம், வீராணம் திட்டம் உள்ளிட்ட பழைய அரசியல் சர்ச்சைகளையும் அவர் மீண்டும் சட்டப்பேரவை விவாதத்துக்குள் கொண்டு வந்தார்.
இதன் மூலம் கடந்த கால ஆட்சிகளில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகளையும் தற்போதைய அரசியல் விவாதத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற வாதத்தை அவர் முன் வைக்கப்படுவது, இது எதிர்க்கட்சிகளின் பார்வையில், தற்போதைய அரசின் செயல்பாடுகள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்படும் நேரத்தில் பழைய விவகாரங்களை முன்வைப்பது விவாதத்தை திசைதிருப்பும் முயற்சி என்ற விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.
மிசா விவகாரம்... சர்ச்சையான சைகை!
இதற்கிடையே, மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட காலகட்டம் குறித்த விஜய்யின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நெருக்கடி நிலை காலத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதும், சிறையில் அவர் தாக்கப்பட்டதாக திமுக தரப்பில் கூறப்பட்டு வரும் சம்பவங்களையும் குறிப்பிட்ட விஜய், அதனை விளக்கும் போது ஒரு சைகை செய்து மு.க.ஸ்டாலினை இழிவுப்படுத்தும் விதமாக பேசினார் என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இதனால் பேச்சைத் தாண்டியும் விஜய்யின் உடல்மொழியும் அரசியல் விவாதமாக மாறியது. திமுக தரப்பினர், வரலாற்றில் நடைபெற்றதாக கூறப்படும் ஒரு துயரமான சம்பவத்தை கேலி செய்யும் வகையில் சைகை செய்யலாமா என எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெண்கள் குறித்து பேச்சு... திரிஷா விவகாரம்!
பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகள் குறித்து பேசிய விஜய், நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி எதிர்க்கட்சித் தலைவர் டபுள் மீனிங்கில் பேசியுள்ளார் என்று அவர் மீது இந்த தவெக அரசு நடவடிக்கை எடுத்தது.
இது குறித்து முதலமைச்சர் விஜய் பேசியபோது அரசியல் விமர்சனம் என்பது கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும், பெண்களை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுகளுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனுடன் 1989-ம் ஆண்டு சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டதாக கூறப்படும் சம்பவத்தையும் விஜய் குறிப்பிட்டும், இதன் மூலம் பெண்களை அவமதிக்கும் அரசியல் பேச்சுகள் குறித்து வரலாற்று சம்பவங்களையும் தற்போதைய நிகழ்வுகளையும் இணைத்து அவர் பேசியிருந்தார்.
உதயநிதியின் பதிலடி... “ரீல்ஸ் ஸ்டுடியோவா?”
விஜய்யின் பேச்சுகளுக்கு எதிர்க்கட்சித் தரப்பிலிருந்து கடும் பதிலடியாக உதயநிதி ஸ்டாலின், சட்டபேரவையில் சமூக வலைதள ரீல்ஸ் மற்றும் சினிமா பஞ்ச் டயலாக் போன்றவை எதுவும் சட்டபேரவையில் எதையும் பயன்படுத்தாமல் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு நேடியாக பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் கேட்டுக் கொண்டார். இதனால் விஜய்-உதயநிதி இடையிலான அரசியல் வார்த்தைப் போரும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
அப்படியென்றால்... விஜய் ஏன் இப்படி பேசினார்?
இந்த முழு விவகாரத்திலும் முக்கியமான அரசியல் கேள்வி இதுதான். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதிலளிப்பது ஒரு காரணமாக இருக்கலாம். முந்தைய ஆட்சியின் செயல்பாடுகளை அரசியல் விவாதத்துக்குள் கொண்டு வருவது மற்றொரு காரணமாக இருக்கலாம். ED உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் தொடர்பான ஆவணங்களை சுட்டிக்காட்டி தனது குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்க முயன்றிருக்கலாம்.
அதேபோல், எதிர்க்கட்சியின் அரசியல் விமர்சனங்களுக்கு சட்டப்பேரவையிலேயே நேரடியாக பதிலடி கொடுக்க வேண்டும் என்ற அரசியல் அணுகுமுறையும் இதன் பின்னணியில் இருக்கலாம்.
குறிப்பாக, “நான் பதிலளிக்கும்போது யாரும் வெளியேறாமல் நேருக்கு நேர் பதில் கேளுங்கள்” என்ற சவால், சட்டப்பேரவையை நேரடி அரசியல் மோதலுக்கான களமாக மாறியது.
ஒரே கூட்டத்தொடரில்... இத்தனை சர்ச்சைகள் ஏன்?
இந்த கூட்டத்தொடரில் விஜய்யின் பேச்சுகளில் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த அரசியல் விவகாரங்கள் இடம்பெற்றுள்ளது. ஒருபுறம் ED ஆவணங்கள்... மறுபுறம் மதுபானக் கடைகள், கட்சி நிதி வசூல்...அடுத்து கரூர் கேங்... பின்னர் ரத்தீஷ் யார் என்ற கேள்வி...அதன் பின்னர் சர்க்காரியா கமிஷன், வீராணம்... அடுத்து மிசா விவகாரம்... மேலும் திரிஷா, பெண்கள், ஜெயலலிதா... என பல்வேறு அரசியல் விவகாரங்கள் ஒரே சட்டப்பேரவை விவாதத்தில் இணைந்தது. இதுவே ஆளும் தரப்பு - எதிர்க்கட்சி இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியது.

LIVE 24 X 7