சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து, முன்னாள் திமுக எம்எல்ஏ இ.கருணாநிதி விரிவான விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது மகன் தொடர்புடைய வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி சட்டப்பேரவையில் தவறான தகவல்கள் கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விஜய் பேசிய விவகாரம் :
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், திமுக ஆட்சி காலம் தொடர்பான பல்வேறு அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். அப்போது, பல்லாவரம் தொகுதியின் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியின் மகன் தொடர்புடைய வழக்கையும் அவர் குறிப்பிட்டார்.
அந்த வழக்கில் காவல்துறை நடவடிக்கைகள் தாமதமாக மேற்கொள்ளப்பட்டதாக விஜய் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இ.கருணாநிதி, சம்பவம் தொடர்பான உண்மை நிலவரங்களை விளக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இ.கருணாநிதி விளக்க அறிக்கை :
தனது அறிக்கையில் இ.கருணாநிதி கூறியுள்ளதாவது,
"நான் கடந்த 2016 முதல் 10 ஆண்டுகள் பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளேன். மேலும் 45 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் கட்சி பணியாற்றி வருகிறேன்.
எனது மூத்த மகன் ஆண்டோ மதிவாணன், எனது விருப்பத்திற்கு மாறாக பெசன்ட் நகரைச் சேர்ந்த அந்தோணி என்பவரின் மகள் மெர்லினா அன்னை காதலித்து வந்தார். பின்னர் கடந்த 20.01.2017 அன்று அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தேன்.
திருமணத்திற்குப் பிறகு அவர்கள் திருவான்மியூரில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அந்த வீட்டிற்கு குடும்ப நிகழ்ச்சிகளுக்காக சில முறை மட்டுமே சென்றுள்ளேன். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நான் தலையிடவில்லை" என தெரிவித்துள்ளார்.
மெர்லினா தொடர்பான வழக்கு குறித்து விளக்கம் :
திருவான்மியூரில் உள்ள அந்த வீட்டில் பணியாற்றிய ரேகா என்ற பணிப்பெண் துன்புறுத்தப்பட்டதாக வெளியான தகவலை தொலைக்காட்சி வாயிலாகவே தெரிந்து கொண்டதாக இ.கருணாநிதி கூறியுள்ளார்.
இதையடுத்து காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றதாகவும், 18.01.2024 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதில் தாமதம் இல்லை" :
முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் கூறிய தகவல்களில் சில உண்மைக்கு மாறானவை என குற்றம்சாட்டியுள்ள இ.கருணாநிதி,
"ஊடகங்களில் செய்தி வெளியான பிறகே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது என்றும், பல நாட்கள் கழித்தே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை 18.01.2024 அன்றே வழக்கு பதிவு செய்தது.
மேலும் நீதிமன்ற உத்தரவுகள் இருந்த நிலையிலும், காவல்துறையினர் 25.01.2024 அன்று சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர்" என விளக்கம் அளித்துள்ளார்.
"மெர்லினாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை" :
தனக்கும் மெர்லினா அன்னுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எந்தவிதமான தனிப்பட்ட தொடர்பும் இல்லை என இ.கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், மெர்லினா அன் மற்றும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனின் மருமகளான மார்சியா அன் ஆகியோர் சகோதரிகள் என்றும், அதன் காரணமாக சபாநாயகர் குடும்பத்துடன் மெர்லினா நெருக்கமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லீமா ரோஸ் தொடர்பாகவும் விளக்கம் :
மேலும், லாட்டரி மார்ட்டினின் மனைவியும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான லீமா ரோஸின் உறவினர் எனக் கூறிக்கொண்டு மெர்லினா அன் செயல்பட்டு வருவதாகவும், அதனை சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டு வருவதாகவும் இ.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
"அரசியல் ரீதியாக என்னை தொடர்புபடுத்த வேண்டாம்" :
வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தன்னை இந்த விவகாரத்துடன் தொடர்புபடுத்தி முதலமைச்சர் விஜய் பேசியிருப்பது தவறானது என இ.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கில் காவல்துறை சட்டப்படி செயல்பட்டதாகவும், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதிலும் கைது நடவடிக்கையிலும் எந்தவித தாமதமும் இல்லை என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மெர்லினா விவகாரம் தொடர்பான அரசியல் விவாதம் தற்போது தமிழ்நாடு அரசியல் களத்தில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

LIVE 24 X 7