சென்னையில் காயிதே மில்லத் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை நோக்கி, திமுகவினர் "துரோகி", "பச்சோந்தி" என முழக்கமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நினைவிடத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையைக் கண்டதும் அங்கிருந்த திமுகவினர் தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததே இந்தத் எதிர்ப்புக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எனினும், தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக ஆட்சி அமைக்கக் காங்கிரஸ் தனது ஆதரவை வழங்கியது.
தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்துப் பிற கூட்டணிக் கட்சிகள் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்ட வேளையில், காங்கிரஸ் கட்சி எவ்வித முன் அறிவிப்பும் இன்றி தவெகவுக்கு ஆதரவளித்தது திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே, செல்வப்பெருந்தகைக்கு எதிராக திமுகவினர் தற்போது தொடர் விமர்சனங்களையும் கண்டன முழக்கங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

LIVE 24 X 7