முதலமைச்சர் விஜயை அவதூறாக பேசிய வழக்கில் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு 15 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவருடைய மகன் செய்தியாளர்களிடம், தன்னுடைய அப்பாவை துப்பாக்கி முனையில் மிரட்டுவதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதோடு அவதூறு வழக்கில் 13 மணி நேரம் விசாரணை நடத்தியதாகவும் அக்சய் மார்க்கண்டேயன் தெரிவித்துள்ளார்.
விளாத்திக்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் நேற்றைய தினம் காலையில் கைது செய்யப்பட நிலையில், கிட்டத்தட்ட அவரிடம் 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது 15 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் இருக்கிறார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட எம்எல்ஏ மகன் அக்சய் மார்க்கண்டேயன் செய்தியாளர்களிடம் பேசியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக கோவில்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய்யை விமர்சித்து பேசினார். குறிப்பாக கரூரில் சட்டசபையில் பேசினாலே எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்துவிடுகின்றனர். இதனால் சட்டமன்ற கதவுகளை அடுத்தமுறை மூட போவதாக கருத்து ஒன்றினை தெரிவித்திருந்தார் முதலமைச்சர் விஜய். இதனை குறிப்பிட்டு சட்டசபையின் கதவுகளை மூடினால் எலும்பை உடைப்போம் என எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசியிருந்தார்.
அவருடைய இந்த பேச்சு சர்ச்சைகளை கிளப்பியது. இதனையடுத்து முதலமைச்சரை மிரட்டும் தொனியில் பேசியதாக அவர் மீது தவெக நிர்வாகிகள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் கைது செய்யப்பட அவர், நேற்றிரவு தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதனையடுத்து எம்எல்ஏ மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்நிலையில் கைது செய்யப்பட மார்க்கண்டேயன் மகன் அக்சய் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாண்புமிகு முதலமைச்சர் உங்க பையன் தான் உங்க கூட இல்ல. என் அப்பா எனக்காகவும், விளாத்திக்குளம் மக்களுக்காகவும் ரொம்ப காலமாக உழைத்து கொண்டிருக்கிறார். அவர் எங்களுடன் இருக்கனும் ஆசைப்படுறோம். இப்படியெல்லாம் பண்ணாதீங்க சார். சட்டமன்றத்துக்குள் எல்லாரையும் அடைச்சு வைக்கனும் என்று இந்த முதலமைச்சர் சொல்கிறார்.
அப்படியென்றால் அதனை கைப்பற்றி அவர்கள் நினைப்பதை எல்லாம் சட்டமாக இயற்ற வேண்டும் என்று தான் அவர்களின் நோக்கம் என்றும் கூறியுள்ளார். ஒரு அவதூறு வழக்கில் எவ்வளவு நேரம் விசாரணை நடத்த முடியும். ஒரு மணி நேரம் விசாரிக்கலாம். ஏனென்றால் பேசின வீடியோவே ஐந்து நிமிடம் தான் ஆனால் விசாரணை மட்டும் 13 மணி நேரமா?
மேலும் அவர் ஒரு சுகர் பேஷன்ட்.இதய பிரச்சனையும் உள்ளது. ஆனால் காவல்துறையினர் அவரை அச்சுறுத்தும் விதமாக துப்பாக்கி முனையில் அவர்கள்என்ன சொல்கிறோர்களோ அந்த கருத்தினை சொல்ல வேண்டும் என்று அச்சுறுத்துகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டுவதாக மார்க்கண்டேயன் முன்வைத்த குற்றச்சாட்டு முழுக்க முழுக்க உண்மை என்றும் தெரிவித்தார் அக்சய். வெளியே வந்து அவர் சொன்னதை சொல்ல வேண்டும். துப்பாக்கி முனையில் மிரட்டியதை சொல்லக்கூடாது. துப்பாக்கி முனையில் மிரட்டியது உண்மை தான் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் மார்க்கண்டேயன் மகன் அக்சய். அவருடைய இந்த பேட்டி தற்போது பெரியளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பாக மருத்துவ பரிசோதனைக்காக எம்எல்ஏ மார்க்கண்டேயன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம், துப்பாக்கி முனையில் தன்னை போலீசார் மிரட்டுகின்றனர். மார்ச்சுவரியில் அடைப்பதற்கு முயற்சி செய்வதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

LIVE 24 X 7