‘மன்னித்துக் கொள்ளுங்கள்’ - பெண் மருத்துவர் பாலியல் படுகொலைக்கு மம்தா வருத்தம்
மேற்குவங்க மாநிலத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்த நிலையில், சம்பவம் தொடர்பாக CBI விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கொல்லப்பட்ட தனது மகளுடன் பணிபுரிந்த சில பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகக் கூறி அவர்களது பெயர்களுடன் மாணவியின் பெற்றோர் புகாரளித்துள்ளனர். அத்துடன் நாடு முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே வேளையில் சம்பவம் நடந்த மருத்துவமனை, போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. அதில், இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, மேற்கு வங்க மாநிலம் மட்டுமல்லாது, நாடு முழுவதிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தது.
மேலும், நாடு முழுவதிலும் பாதிக்கப்பட்ட பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று செவ்வாய்கிழமை [27-08-24] பெண் மருத்துவரின் படுகொலைக்கு நீதிகேட்டு மீண்டும் போராட்டம் வெடித்தது.
இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை மாநிலச் செயலகத்தை நோக்கி நடைபெற்ற 'நபன்னா அபிஜன்' [Nabanna Abhijan] பேரணியின் போது, அமைதியான முறையில் நடந்த போராட்டத்தின் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினர். இந்த அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக 12 மணி நேர மாநிலம் தழுவிய கடையடைப்புக்கு ''Bengal Bandh' அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கிடையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின், மாணவர் பிரிவின் நிறுவன தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து, அக்கட்சியின் தலைவரும், மேற்குவங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, பாலியல் கொலையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு, மாணவர் பிரிவின் நிறுவன தினத்தை அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
இது குறித்து கூறியுள்ள அவர், “சில நாட்களுக்கு முன்பு ஆர்.ஜி.கார் மருத்துவமனையில், இறந்த சோகமான இழப்பால் துக்கமடைந்த எங்கள் சகோதரிக்கு திரிணாமுல் சத்ர பரிஷத் [மாணவர் பிரிவு] நிறுவன தினத்தை அர்ப்பணிக்கிறேன். தயவு செய்து, கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சகோதரியின் குடும்பத்தாருக்கும், விரைவான நீதியைப் பெறுவதற்கும், இந்தியா முழுவதும் இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களுக்கு ஆளான அனைத்து வயது பெண்களுக்கும் எங்கள் இதயப்பூர்வமான அனுதாபங்கள். எங்களை மன்னிக்கவும்.
மாணவர்கள், இளைஞர்கள் சமூகத்தில் பெரும் பங்கு வகிக்கின்றனர். சமுதாயத்தையும் பண்பாட்டையும் விழித்திருந்து புதிய நாளுக்கான கனவை வழங்குவதும், புதிய நாளின் பிரகாசமான சபதங்களால் சுற்றியுள்ள அனைவரையும் ஊக்கப்படுத்துவதும் மாணவர் சமுதாயத்தின் பணியாகும்.
சமுதாயத்தையும் பண்பாட்டையும் விழித்திருந்து புதிய நாளுக்கான கனவை வழங்குவதும், புதிய நாளின் பிரகாசமான சபதங்களால் சுற்றியுள்ள அனைவரையும் ஊக்கப்படுத்துவதும் மாணவர் சமுதாயத்தின் பணியாகும். அவர்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள் என்னவென்றால், இந்த முயற்சியில் ஊக்கம் பெறுங்கள், உறுதியுடன் இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?