என்கவுண்டர் நல்லதல்ல.. விஜய் அரசியல் Wait பண்ணி பார்ப்போம்.. கே. பாலகிருஷ்ணன்
என்கவுண்டர் தமிழகத்தில் அதிகரித்து வருவது தமிழக நலனுக்கு நல்லதல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) CPIM மாநில தலைவர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இன்று (செப். 22) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) CPIM சார்பில் கந்துவட்டி ஒழிப்பு சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதில் மாநில தலைவர் கே. பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த பகுதி ஆகும். இங்குள்ள மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காகவும் நிதி பற்றாக்குறைக்காகவும் சில தனியார் நிறுவனங்களிடம் குழுக்களாகவும் கந்துவட்டிகளாகவும் கடன் பெறுகின்றனர். கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்தாத போது பல்வேறு இன்னல்களுக்கு அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள் உட்பட கடன் வாங்கியவர்கள் ஆளாகின்றனர். எனவே மக்களை கடன் வலையில் இருந்து மீட்டு கந்து வட்டி மைக்ரோ பைனான்ஸ் குழு கடன்களை அதிக வட்டி விகிதங்களை ஆராய்ந்து முறைப்படுத்தி ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி நெறிப்படுத்திட மாவட்ட நிர்வாகம் சீரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நேற்று நடந்த முடிந்த தேர்தலில் இலங்கையில் புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் இது குறித்து தொடர்ந்து பிரதமர் மோடியிடம் கடிதம் எழுதியும், இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் பிடிபடும் போதெல்லாம் பிரதமர் மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது வேதனையளிக்கிறது. இலங்கை ராணுவத்திடம் இருந்து தமிழ் மீனவர்கள் பாதிக்காத வகையில் இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசிடம் பிரதமர் மோடி இனியாவது பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.
மேலும் படிக்க: உதயநிதி கிள்ளுக்கீரை அல்ல... சீமான் பாஜகவின் கைக்கூலி... நாஞ்சில் சம்பத் விமர்சனம்!
கந்துவட்டி போன்ற பிரச்சனைகளை பொருத்தவரை மக்கள் போராட தயங்குவதால் அதிகாரிகளின் நடவடிக்கை குறைவாக உள்ளது. கந்துவட்டி சட்டத்தின்படி ஒருவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால் காவல்துறை அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஒருநாள் இரண்டு நாட்களுக்குள் முடியும் பிரச்சனை அல்ல. கந்துவட்டி என்ற பிரச்சனை வரும்போது தொடர் போராட்டம் செய்வதுதான் இதற்கு தீர்வாக உள்ளது.
ஏதோ காரனங்களால் சிறை செல்லும் கைதிகளை மனித உரிமைகள் படி நடத்த வேண்டும். காவல் துறை என்கவுண்டர் தமிழ்நாட்டில் தற்போது அதிகரித்து வருகிறது. அவர்கள் எங்கவுன்டருக்குகு சொல்லும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை. என்கவுண்டர் மரணங்கள் தமிழகத்துக்கு நல்ல விஷயம் அல்ல. மது விலக்கு போதை விழிப்புணர்வு குறித்து அனைத்து கட்சிகளும் பொறுப்புணர்வோடு செயல்படுகிறது. ஒரே நாளில் மதுவிலக்கு என்ற பெயரில் அனைத்து மதுக்கடைகளையும் மூடிவிட முடியாது. மக்களுக்கு போதிய விழிப்புணர்வு கொடுத்து போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட வைத்து படிப்படியாக தான் மதுக்கடைகளை மூட முடியும்.
விஜய் மாநாட்டிற்கு பிறகு தமிழக அரசியலில் பெரிய மாற்றங்கள் காத்திருக்கிறது என்று கூறப்படுகிறது. அப்படி என்ன மாற்றங்கள் இருக்கும் என்பதை Wait பண்ணி பார்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?