ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: யாருக்கு அதிகாரம்? மத்திய அமைச்சர் பதில்

ஆன்லைன் சூதாட்டத்தை  தடை செய்ய மாநில அரசே சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Mar 27, 2025 - 09:44
Mar 27, 2025 - 09:48
 0
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: யாருக்கு அதிகாரம்? மத்திய அமைச்சர் பதில்
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்

நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு கடந்த 10-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், நேற்று (மார்ச் 26) கேள்வி நேரத்தின் போது திமுக எம்.பி.க்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். 

அப்போது பேசிய திமுக எம்.பி.தயாநிதி மாறன்,  தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டுகளுக்கு தடை இருக்கும் நிலையில், இந்த தளங்களுக்கு எதிராக மத்திய அரசு தனது தார்மீக கடைமையில் இருந்து விலகுகிறதா? என கேள்வி எழுப்பினார். மேலும், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டு தளங்களுக்கு தடை விதிக்க மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்துக்கு எவ்வளவு காலம் ஆகும்? என்றும் கேட்டார்.

மாநிலங்களே சட்டம் இயற்றலாம்

திமுக எம்.பி.யின் கேள்விக்கு பதிலளித்த மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “மத்திய அரசின் தார்மீக அதிகாரம் குறித்து கேள்வி எழுப்ப யாருக்கும் உரிமை இல்லை என கூறியதுடன் அரசியல் சாசனம் வழங்கிய கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் நாடு இயங்குகிறது” என்றும் தெரிவித்தார். 

பின்னர் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருப்பாதாக கூறிய அவர்,  சூதாட்டம் மற்றும் பந்தயம் போன்றவை மாநில பட்டியல் சார்ந்தவை என்றும், இவற்றை தடை செய்ய மாநில அரசே சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார்.

நாடாளுமன்றத்தில் சமீபத்தில் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் புறக்கணிப்பட்டுள்ளதாக அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow