லைஃப்ஸ்டைல்

COCONUT OIL: தேங்காய் எண்ணெய்யில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

தேங்காய் எண்ணெய்யினை பல தலைமுறைகளாக நமது முன்னோர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துவதால் நமக்கு என்ன பயன் கிடைக்கிறது என்பதனை இங்கு காணலாம். 

COCONUT OIL: தேங்காய் எண்ணெய்யில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
தேங்காய் எண்ணெய்

இந்தியாவிலேயே தேங்காய் எண்ணெய்யின் பயன்பாடு கேரளாவில் மிக அதிக அளவில் உள்ளது.  அதேபோல் தமிழகத்தில் கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேங்காய் எண்ணெயில் பயன்படுத்துவதால் பல்வேறு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பெறலாம். நமது உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. தேங்காய் எண்ணெயினால் இதய ஆரோக்கியம், உடல் பருமன் அதிகரிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, மூளை வளர்ச்சி போன்றவற்றிற்கு பல வழிகளில் நன்மை பயக்கிறது. 

இதய ஆரோக்கியம்

இன்றைய மக்களின் பெரும்பாலான பிரச்சனையாக உள்ளது இதய ஆரோக்கியம். நன்றாக இருக்கும் ஒருவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது தற்போது அதிகரித்து வருகிறது. நமது உடல் நலத்தை பாதுகாக்காமல் இதயத்தின் ஆரோக்கியம் குறித்து கவலைப்படாமல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் பல்வேறு கலப்படமான எண்ணெய்களை பயன்படுத்துவதே முக்கிய பிரச்சினையாக உள்ளது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க இதயத்தை பாதுகாக்கவும் பக்கவாத பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது தேங்காய் எண்ணெயை அன்றாடம் உணவின் மூலமாக பயன்படுத்தி வருவதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. 

உடல் பருமன்

இன்றைய காலக்கட்டத்தில் மாரடைப்பு பிரச்சனையைப் போன்று உடல் எடை அதிகரிப்பதும், வளர்ந்து வரும் நாகரீக உலகில் அதிகரித்து வருகிறது. உடல் பருமன் பிரச்சனையால் பலரும் மருத்துவமனைகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை நாடி வருகின்றனர். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அன்றாட உணவில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் கெட்ட கொழுப்பை குறைத்து ஆரோக்கியமான கலோரிகளை பெறலாம். 

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

தேங்காய் எண்ணெயை அதிக அளவில் பயன்படுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இயலும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது கிருமிகள் மற்றும் வைரஸ்கள் பாக்டீரியாக்கள் அளிக்கும் வல்லமை கொண்டதாக உள்ளது. தேங்காய் எண்ணெயை உணவில் சேர்ப்பதன் மூலமும் உடலில் தேய்த்து கொள்வதன் மூலமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். 

சிறந்த மாய்ஸ்ரைசர்

தேங்காய் எண்ணெய் தேக ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும், தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த மாய்ஸரைசராகவும் பயன்படுகிறது. தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி கொப்பளிப்பதன் மூலம்,  ஈறுகளை வலுப்படுத்தவும் மற்றும் வாயில் உள்ள கிருமிகளை அழித்து ஆரோக்கியமவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இவ்வளவு நன்மை வாய்ந்த தேங்காய் எண்ணெயை நாம் பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான நன்மைகள் பெறலாம்.

Read More:

TATA IPL 2025: அதிரடி காட்டிய டி காக்.. ராஜஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த KKR..!

வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.. செப்பு பாத்திரத்தால் இவ்வளவு பிரச்னையா?