பூத் வாரியாக சோதனை செய்ய வேண்டும்...இல்லையென்றால் தி.மு.க-வினர் கள்ள ஓட்டு போடுவார்கள்.. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
அ.தி.மு.க ஆட்சியில் நேர்மையாக நடந்து கொண்ட காவல்துறை தற்பொழுது தி.மு.கவிற்கு மட்டுமே வேலை செய்து வருகிறார்கள் என குற்றச்சாட்டு

அ.தி.மு.க பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் யார், யார் என்று போலீசார் கேட்கின்றார்கள், அவர்கள் தங்கள் வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தி.மு.கவிற்கு வாக்களிக்க தயாராக இல்லை
முன்னாள் அமைச்சரும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் கழக பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் கோவை அ.தி.மு.க தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் நடைபெற்றது.கோவை மாநகர மாவட்டம், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், கோவை புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கழக பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் கோவை நடைபெற்றது.
Read more: யாரும் எதிர்பாரத பேச்சு..விமான நிலையம் வரை வருகை..ரேவந்த் ரெட்டியை வழியனுப்பிய ஆ.ராசா
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, “பொதுமக்கள் தி.மு.க-வை வீட்டிற்கு அனுப்ப தயாராகி விட்டார்கள். மேலும் எப்பொழுது மீண்டும் எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மலரும் என்று மக்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றார்கள் என்று தெரிவித்தார்.
அ.தி.மு.க ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செய்து உள்ளோம் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். தி.மு.கவினர் பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வாக்குகளை சேகரிக்க விடக்கூடாது. மேலும் இன்று தி.மு.கவிற்கு வாக்களிக்க மக்கள் யாரும் தயாராக இல்லை என்றும் தெரிவித்தார்.
பூத் வாரியாக சோதனை
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், கஞ்சா, பாலியல் தான் நடக்கின்றது. தமிழகத்தில் மக்களுக்கு ஏதாவது தேவை என்றால், இப்போதும் அ.தி.மு.கவினரை தான் மக்கள் தேடி வருகிறார்கள். 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க ஆட்சி அமைவது உறுதி. அதுபோல் வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலிலும் மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள் என்று அனைவரும் அ.தி.மு.கவினராக தான் இருப்பார்கள் என்று உறுதி அளித்தார்.
Read more: சென்னையில் தொடரும் போதைப்பொருள் விற்பனை.. போலீசார் தீவிர சோதனை..!
மேலும் நமக்கு எதிரி தி.மு.க தான் களத்தில் கவனமுடன் செயல்படுங்கள்.சட்டமன்ற தேர்தல் என்று வந்து விட்டால் மக்கள் அ.தி.மு.க விற்கு தான் வாக்களிப்பார்கள். கடந்த தேர்தலிலும் கோவை மக்கள் நமக்கு 10 தொகுதியிலும் வெற்றியை தந்தார்கள் என்று பெருமையுடன் தெரிவித்தார். மேலும் வாக்காளர்கள் படிவத்தை பூத் வாரியாக சோதனை செய்ய வேண்டும். இல்லையென்றால் இறந்தவர்களின் ஓட்டுகளை தி.மு.கவினர் கள்ள ஓட்டு போடுவார்கள்.
உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்
போலீசார்கள் அ.தி.மு.க பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் யார்,யார் என்று கேட்கின்றார்கள் என்று தகவல்கள் வருகின்றது. அவர்களுக்கு கொடுத்து விடுங்கள். மேலும் காவல் துறையின் வேலை செய்வது இல்லை, தி.மு.கவிற்கு வேலை செய்வதை மட்டுமே பார்க்கின்றார்கள். கஞ்சா விற்பனை மற்றும் குற்றவாளிகளையும் பிடிப்பதில்லை, அ.தி.மு.கவினரை பற்றி கேட்டு அவர்களை அச்சுறுத்தும் வேலைகளை செய்ய வேண்டாம், நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். அ.தி.மு.க ஆட்சியில் நேர்மையாக நடந்து கொண்ட காவல்துறை தற்பொழுது தி.மு.கவிற்கு மட்டுமே வேலை செய்து வருகிறார்கள்” என தெரிவித்தார்.
What's Your Reaction?






