K U M U D A M   N E W S

Chief Minister Stalin

பூத் வாரியாக சோதனை செய்ய வேண்டும்...இல்லையென்றால் தி.மு.க-வினர் கள்ள ஓட்டு போடுவார்கள்.. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அ.தி.மு.க ஆட்சியில் நேர்மையாக நடந்து கொண்ட காவல்துறை தற்பொழுது தி.மு.கவிற்கு மட்டுமே வேலை செய்து வருகிறார்கள் என குற்றச்சாட்டு

இது வாட்ஸ்அப் யுகம்! Forward மெசேஜ்களை நம்ப வேண்டாம்... முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் இருக்கும் பல கோடி மக்களுக்கு ‘லைஃப்’ கொடுத்ததால்தான், கருணாநிதி இன்னும் ‘லைவ்’-ஆக இருக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் ‘கலைஞர் 100 – வினாடி-வினா’ போட்டி பரிசளிப்பு நிகழ்வில் உரையாற்றினார்.

பாதுகாப்பற்ற தமிழ்நாடு.. விழித்துக்கொள்ளுங்கள் முதல்வரே! - எல்.முருகன் கோரிக்கை

“மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் என எவருக்கும் பாதுகாப்பு இல்லை. இனியாவது விழித்துக் கொள்வாரா காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒன்று கூடும் அமைச்சர்கள்.. முக்கிய முடிவெடுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்..?

புதிய அமைச்சர்கள் பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதல் கூட்டம். இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது

Savukku Shankar : சிறையில் இருந்து வெளிவந்தவுடன் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த சவுக்கு சங்கர்!

Savukku Shankar Criticized CM Stalin : ''இது தனிநபருக்கு நடந்த கொடுமையாக பார்க்க கூடாது. ஊடக சுதந்திரத்திற்கு ஏற்பட்ட கொடுமையாக தான் பார்க்க வேண்டும். 5 மாதத்திற்கு பிறகு சிறையில் இருந்து வெளி வந்திருக்கிறேன்'' என்று சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

SP Balasubrahmanyam Salai : சென்னையில் எஸ்.பி.பி பெயரில் சாலை.. நினைவு நாளில் கவுரவித்த முதல்வர் ஸ்டாலின்!

CM Stalin Announced SP Balasubrahmanyam Salai : சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்பி பாலசுப்ரமணியம் வாழ்ந்த காம்தார் நகரை, ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’என பெயர் மாற்றம் செய்யக் கோரி, அவரது மகனும் பாடகருமான எஸ்பி சரண், முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.

‘கருத்தியலின் அடையாளம் சீதாராம் யெச்சூரி’..முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

''கலைஞர் மீதும் என் மீதும் அன்பு கொண்டவர் தோழர் சீதாராம் யெச்சூரி. சமூக நீதிக்காகவும், பெண்களின் சம உரிமைக்காவும் போராடினார். அவர் எப்போதும் இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாக திகழ்ந்து வந்தார்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

வைகோ வீட்டில் திருமணம்.. முதல்வருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த துரை வைகோ!

Durai Vaiko Dughter Wedding Invitation To CM Stalin : இயக்கத் தந்தை தலைவர் வைகோவின் உடல் நலன் குறித்து முதல்வர் அவர்கள் மிகுந்த அக்கறையுடன் கேட்டு அறிந்தார். அண்மையில் அமெரிக்கா சென்று வந்த முதல்வர் அண்ணன் தளபதியின் பயணம் வெற்றிகரமாக அமைந்தது குறித்து அவரிடம் எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன்

சிந்து சமவெளி கண்டுபிடிப்பின் 100ம் ஆண்டு.. சர் ஜான் மார்ஷலுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

சிந்துவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த சர் ஜான் மார்ஷலுக்கு ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் சென்னையில் உருவச்சிலை அமைக்கப்படும் என்று கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் முதல் விஜய் வரை.. வாழ்த்து மழை பொழியும் தலைவர்கள்!

''நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பிரதமர் உறுதியான கவனம் செலுத்துவது தமிழ்நாடு மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பைக் காட்டுகிறது'' என்று ஆளுநர் ஆர்.என்.ரவியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

’முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றுகிறார்’.. அன்புமணி ஆவேசம்.. என்ன விஷயம்?

''முதல்வர் ஸ்டாலின் வன்னிய சமுதாயத்திற்கு மிகப்பெரிய துரோகம் செய்து கொண்டிருக்கிறார். இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். வன்னியருக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க முதல்வருக்கு மனது கிடையாது'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

'கண்டேன் அன்பு முகங்களை’.. அமெரிக்க பயண அனுபவங்களை பகிரும் முதல்வர் ஸ்டாலின்.. நெகிழ்ச்சி!

''விமான நிலையத்தில் கிடைத்த அன்பான - மகிழ்வான வரவேற்பைப் பெற்றுக்கொண்ட பின், சான் பிரான்சிஸ்கோவில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள் பல நடந்த பெருமை கொண்ட ஹோட்டல் ஃபேர்மாண்ட்டில் தங்கினேன்''

அமெரிக்காவில் இருந்து சென்னை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.. உற்சாகமாக வழியனுப்பி வைத்த தமிழர்கள்!

. அமெரிக்க வாழ் தமிழர்கள் சிகாகோ விமான நிலையத்துக்கு திரண்டு வந்து முதல்வரை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். 'நீங்கள் மீண்டும் கண்டிப்பாக அமெரிக்காவுக்கு வர வேண்டும்' என்று முதல்வரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

திருச்சி மக்களுக்கு குட் நியூஸ்.. ரூ.2,000 கோடியில் JABIL ஆலை.. முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

JABIL நிறுவனம் ஆப்பிள், சிஸ்கோ, HP நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்து வருகிறது. திருச்சியில் JABIL தொழிற்சாலை அமைவதன்மூலம் சுமார் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவில் வரப்போகும் அதிரடி மாற்றம்.. அமெரிக்காவில் இருந்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை.. உதயநிதி சொல்வது என்ன?

அமெரிக்காவில் கையெழுத்தாகும் முதலீடுகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழுவினரிடம் முதல்வர் ஸ்டாலின் தகவல்களை பகிர்ந்து கொண்டார். அமெரிக்கவாழ் தமிழர்கள் அளித்த வரவேற்பு பற்றியும், முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி பற்றித் தெரிந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அமெரிக்கா சென்றார் ராகுல் காந்தி.. இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு!

இந்த முறை ராகுல் காந்தி அமெரிக்காவில் என்ன பேச போகிறார்? அதற்கு பாஜக என்ன எதிர்வினையாற்ற போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஏற்கெனவே அமெரிக்காவில் உள்ளார். இதனால் ராகுல் காந்தியும், ஸ்டாலினும் அங்கு சந்தித்துக் கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

துரைமுருகன்-ரஜினி விவகாரம்.. சட்டென வந்து விழுந்த கேள்வி.. மு.க.ஸ்டாலினின் பதில் இதுதான்!

விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் சர்ச்சைகளுக்கு காரணமான துரைமுருகனும், ரஜினியுமே பின்பு இந்த பிரச்சனையை முடித்து வைத்தனர். அதாவது இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினி ''அமைச்சர் துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. எங்கள் நட்பு எப்போதும் தொடரும்'' என்று கூறியிருந்தார்.

CM Stalin America Visit : முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் - டி.டி.வி.தினகரன் விமர்சனம்

CM Stalin America Visit : தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க இன்று இரவு அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 17 நாட்கள் பயணத்தில், தொழில் முதலீட்டாளர்கள், முன்னணி தொழில் நிறுவன பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார். இந்த பயணம் குறித்து விமர்சித்துள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

அமெரிக்கா செல்லும் முதல்வர் ஸ்டாலின்.. உதயநிதி தலைமையில் ஆலோசனைக்கூட்டம்!

முதல்வர் ஸ்டாலின் சுமார் 17 நாட்கள் அமெரிக்காவில் இருப்பதால், அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகின. ஆனால் இது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'திமுகவில் கலவரம் வெடிக்கும் என்று ரஜினியே கூறி விட்டார்'.. கொளுத்திப்போட்ட அண்ணாமலை!

''துரைமுருகன்னு ஒருத்தர் இருக்கிறார். கலைஞர் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டினவரு. அவர் என்ன சொல்ல வருகிறார். ஒரு விஷயத்தில் பாராட்டுகிறாரா? இல்லை திட்டுகிறாரா? என்பது தெரியாது'' நடிகர் ரஜினிகாந்த் நேற்று பேசி இருந்தார்.

Kamal Haasan Visit CM Stalin : முதல்வர் ஸ்டாலினை திடீரென சந்தித்த கமல்ஹாசன்.. என்ன விஷயம்?

Kamal Haasan Visit CM Stalin in Chennai : நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நடத்தி வந்தாலும், அவர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் சினிமாவில் நடிப்பதற்கே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கமல்ஹாசனும் அரசியலில் இருக்கிறார் என்பது தேர்தல் நேரத்தில்தான் அனைவருக்கும் தெரிகிறது.

''பயப்படாதீங்க ரஜினி.. நான் உஷாராக இருப்பேன்''.. சூப்பர் ஸ்டாருக்கு உறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின்!

'''பள்ளி ஆசிரியருக்கு பழைய மாணவர்களை சமாளிப்பது கஷ்டம். அதேபோல் திமுகவில் ஏராளமான பழைய மாணவர்கள் (மூத்த அமைச்சர்கள்) உள்ளனர். இந்த பழைய மாணவர்களை சமாளிப்பது மிகவும் கஷ்டம். ஆனால் அதை ஸ்டாலின் சரியாக செய்கிறார்'' என்று ரஜினிகாந்த் பேசி இருந்தார்.

கருணாநிதியை ராஜ்நாத் சிங் புகழ்ந்தது ஏன் தெரியுமா?.. முதல்வர் ஸ்டாலின் முன்பு போட்டுடைத்த ரஜினி!

''விமர்சனங்கள் தேவைதான். அது வேண்டும். ஆனால் விமர்சனம் மழை மாதிரி இருக்க வேண்டும். புயல் மாதிரி இருக்கக் கூடாது. விமர்சனம் செய்யுங்கள்; ஒருவருடைய மனதை நோகடிக்காதீர்கள்'' என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

துரைமுருகனை, ஸ்டாலின் எப்படி சமாளிக்கிறார்?.. மேடையில் தெறிக்க விட்ட ரஜினி.. குலுங்கி குலுங்கி சிரித்த அமைச்சர்கள்!

''அறிவார்ந்தவர்கள் இருக்கும் சபையில் பேசாமல் இருப்பது அறிவாளித்தனம் என்று சொல்வார்கள். ஆனால் என்ன செய்வது நான் பேசித்தான் ஆக வேண்டும். இந்த விழாவில் என்ன பேசனும் என்பதைவிட என்ன பேசக்கூடாது என்பதை லிஸ்ட் போட்டு எடுத்து வந்தேன்'' என்று ரஜினிகாந்த் கூறினார்.

'வரலாற்றில் அழிக்க முடியாத தலைவர்'.. கருணாநிதிக்கு புகழ்மாலை சூட்டிய ராஜ்நாத் சிங்!

சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக் கொடி ஏற்றும் உரிமையைப் பெற்று தந்தவர் கருணாநிதி தான். தமிழ்நாட்டில் முதல்முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றியவர் அவர் தான். வரலாற்றில் அழிக்க முடியாத பல்வேறு சாதனைகளை படைத்த கருணாநிதி, ஒரு மாநிலத்தின் தலைவராக இல்லாமல் தேசிய தலைவராக பார்க்கப்பட்டார்.