K U M U D A M   N E W S

Chief Minister Stalin

'இந்திய அரசியலின் ஆளுமை'.. கலைஞர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி!

''தமிழ்நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் கருணாநிதி எப்போதும் ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ்நாட்டு மக்களால் பலமுறை தேந்தெடுக்கப்பட்ட கருணாநிதி ஒரு அரசியல் தலைவராக, முதலமைச்சராக இந்திய வரலாற்றில் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளார்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

SIPCOT Workers Hostel : சிப்காட் தொழிலாளர்களுக்காக தங்கும் விடுதி... இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்!

Chief Minister Stalin Inaugurates SIPCOT Workers Hostel in Tamil Nadu : தமிழ்நாடு அரசு சார்பில் சிப்காட் தொழிலாளர்களுக்காக நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக இன்று (ஆகஸ்ட் 17) திறந்து வைக்கிறார்.

'மீனவக் குடும்பங்கள் அச்சம்; நிரந்தர தீர்வு வேண்டும்'.. ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்!

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 மீனவர்கள் நேற்று நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'முதல்வர் ஸ்டாலினே உதயநிதியை ட்ரோல் பண்ணிட்டார்... நாங்க என்ன சொல்ல?' - கலாய்த்த அண்ணாமலை!

''தமிழக முதல்வர் ஸ்டாலினே வலுத்திருக்கிறது. பழுக்கவில்லை எனக்கூறி உதயநிதியை ட்ரோல் (Troll ) பண்ணியுள்ளார். முதல்வர் ஸ்டாலினே மகனை ட்ரோல் செய்து விட்டதால் இதற்கு மேல் நாங்கள் என்ன சொல்வது?'' என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

Magalir Urimai Thogai Scheme : இந்த 2 திட்டங்களால் பெண்களின் சமூக பங்களிப்பு அதிகரிப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

CM Stalin on Magalir Urimai Thogai Scheme in Tamil Nadu : ''தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்கள் சமூகத்தில் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. திட்டக்குழு பரிந்துரை, ஆலோசனைகள் சரியாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.