சென்னையில் தொடரும் போதைப்பொருள் விற்பனை.. போலீசார் தீவிர சோதனை..!
சென்னையில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை திரு.வி.க நகர் 16வது தெரு பகுதியில் மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர்.
சந்தேகத்துக்கிடமாக நின்று இருந்தவரிடம் விசாரணை செய்ததில் அவர் பெரம்பூர் பகுதி சேர்ந்த தேவ ஆனந்த் என்பதும் சோதனை செய்ததில் அவரிடமிருந்து நான்கு கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணையில் தான் சொந்த உபயோகிப்பதற்காக பெங்களூர் சென்று நைஜீரிய நபரிடம் தொடர்பு கொண்டு 7 கிராம் அளவுக்கு போதை பொருட்களை வாங்கி வந்தது தெரிய வந்தது.
அதில் நண்பர்களுடன் சேர்ந்து பயன்படுத்தியது போக மீதம் உள்ள நான்கு கிராமும் போதை பொருளை கைப்பற்றியது தெரியவந்தது. மேலும் கைது செய்யப்பட்ட தேவ் ஆனந்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மதுரவாயில் அடுத்த வானகரம் கோல்டன் ட்ரசர் அடுக்குமாடி குடியிருப்பு அருகே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது மெத்தபெட்டமைன் போதை பொருள் வைத்திருந்த கிஷோர் குமார், மணிகண்டன், பாசில் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ஐந்து கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?






