யாரும் எதிர்பாரத பேச்சு..விமான நிலையம் வரை வருகை..ரேவந்த் ரெட்டியை வழியனுப்பிய ஆ.ராசா

மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிராக கட்சி வேறுபாடுகளை களைந்து போராட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

Mar 22, 2025 - 17:54
Mar 22, 2025 - 18:21
 0
யாரும் எதிர்பாரத பேச்சு..விமான நிலையம் வரை வருகை..ரேவந்த் ரெட்டியை வழியனுப்பிய ஆ.ராசா

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என யாரும் எதிர்பாராத வகையில் சென்னையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தலைவர்கள் பங்கேற்பு

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள்,  கட்சிகளின் முக்கிய தலைவர்கள்  கலந்து கொண்டு தொகுதி மறுசீரமைப்பு  குறித்து தங்களது நிலைபாட்டை தெரிவித்தனர்.  

Read more: சென்னையில் மாணவர் மீது சரமாரி தாக்குதல்- உள்ளிருப்பு போராட்டத்தில் இறங்கிய சக மாணவர்கள்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சியை காக்க ஒன்று திரண்டிருக்கிறோம்.  இந்தியக் கூட்டாட்சியைக் காக்கும் முக்கியமான நாளாக இந்த நாள் அமையப் போகிறது.

தொகுதி மறுசீரமைப்பு

தொகுதி மறுசீரமைப்பு நமது மாநிலங்களை வெகுவாக பாதிக்கப்போகிறது என்பதால் கடுமையாக எதிர்ப்பதாகவும், தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒரு போதும் ஏற்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.

இது வெறும் எண்ணிக்கையை பற்றியது மட்டுமல்ல; நமது அதிகாரம்,  எதிர்காலம், நமது உரிமைகளின் நலன் பற்றியது என்றும் கூறினார்.இதைத்தொடர்ந்து பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி,  மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநில அரசுகளுக்கு, தொகுதியை குறைத்து தண்டனை வழங்குவதா? என்று கேள்வி எழுப்பினார்.

தெலங்கானா முதலமைச்சர்

மேலும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் முன்னெடுப்பிற்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார். மக்கள் பிரநிதிகளை குறைப்பதன் மூலம், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநில அரசுகளுக்கு தண்டனை வழங்குகிறதா என்று கேள்வி எழுப்பிய அவர், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிராக கட்சி வேறுபாடுகளை களைந்து போராட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

Read more: பி.எஸ்.4 வாகனங்கள் மோசடியாக பதிவு- தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

பா.ஜ.க. தலைமையிலான அரசு எப்போதும் மாநில அரசுகளின் கருத்துகளை கேட்பதில்லை, பேசவிடுவதும் இல்லை என்றும், பா.ஜ.க. நினைப்பதையே முடிவாக எடுப்பதாகவும் குற்றம்சாட்டினார். இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு எதிர்ப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று மாலை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வந்திருந்தார். இந்த நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தை முடித்துவிட்டு ஹைதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை திமுக எம்.பி. ஆ.ராசா வழி அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow