சென்னையில் மாணவர் மீது சரமாரி தாக்குதல்- உள்ளிருப்பு போராட்டத்தில் இறங்கிய சக மாணவர்கள்
விடுதியில் மேற்பார்வை பணியை ஒதுக்கிய காரணத்திற்காக மருத்துவக்கல்லூரி டீனை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் மாணவர் தாக்கப்பட்டதை, கண்டித்து சக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாக்குதல்
சென்னை கே.கே நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு மருத்துவக்கல்லூரி நான்காம் ஆண்டு படித்து வரும் கேரளாவைச் சேர்ந்த ஆல்பர்ட் என்ற மாணவரை கல்லூரி ஆன்லைன் உணவு ஆர்டர் செய்ததாக கூறப்படுகிறது.
Read more : இந்தியாவுக்காக ஓரணியில் திரண்டுள்ளோம் - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
இதனை மருத்துவமனைக்கு உள்ளே அனுமதிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவர் ஆர்பர்ட் ஒப்பந்த பணியாளர் பாலா (எ) பாலஜீவகன் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்த பாலா (எ) பாலஜீவகன் என்ற நபர் கடுமையாக தாக்கினார்.
மாணவர்கள் போராட்டம்
இந்த விவகாரத்தில் பாலா மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து எம்ஜிஆர் நகர் போலீசார் அவரை கைது செய்தனர்.இந்த நிலையில், மருத்துவ கல்லூரி மாணவர்கள் இன்று காலை மருத்துவக்கல்லூரி உள்ளே வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Read more: சாலை விபத்தில் வாலிபர் மூளைச் சாவு..உடல் உறுப்பு தானம்!
மேலும், பாலா (எ) பாலஜீவகனுக்கு, விடுதியில் மேற்பார்வை பணியை ஒதுக்கிய காரணத்திற்காக மருத்துவக்கல்லூரி டீனை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?






