அமெரிக்காவின் USAID (United States Agency for International Development) அமைப்பு, ஏழை மற்றும் பிற விளிம்புநிலை நாடுகளுக்கு decades களாக உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. ஆனால், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், பல்வேறு வெளிநாட்டு நிதியுதவிகளைத் திடீரென நிறுத்தியதில் உலகளவில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய ஒரு ஆய்வில் வெளியான தகவலின்படி, USAID உதவிகள் நிறுத்தப்பட்டதால் உலகளவில் சுமார் 1.4 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், 4.5 மில்லியன் சிறு குழந்தைகள் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.
ட்ரம்ப் அரசின் கீழ், பல்வேறு ஹூமனிடேரியன் திட்டங்கள் குறைக்கப்பட்டும், முற்றிலும் நிறுத்தப்பட்டும் உள்ளன. இந்த மனிதாபிமான திட்டங்கள் நிறுத்தப்பட்டதன் காரணமாக, ஏற்கனவே பின்தங்கிய மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வாழும் மக்கள், குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் அகதிகள் போன்றோர், உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் அடிப்படை தேவைகளைப் பெற முடியாமல் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இது, பசி, நோய் மற்றும் மரணம் போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
USAID போன்ற அமைப்புகள் வழங்கும் நிதியுதவிகள், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் முக்கியமான ஆதாரமாக இருந்தது. அந்த நிதியுதவி திடீரென நிறுத்தப்பட்டதால், பல உயிர்கள் ஆபத்தில் சிக்கியுள்ளன என்பது ஆய்வின் முக்கிய கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தொடர்பாக ஐநா மற்றும் பல சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஏற்கனவே இயற்கை பேரழிவுகள், போர்கள் மற்றும் வறட்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் USAID உதவிகள் நின்றதன் விளைவாக உணவில்லா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா போன்ற பெரிய நாடு, நிதியுதவியின் மூலமாக உலக மனிதநேயம் மற்றும் சமநிலை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வந்த நிலையில், இதுபோன்ற மனிதாபிமான அடிப்படையிலான இத்திட்டத்தை அதிபரான உடன் ட்ரம்ப் ரத்து செய்திருப்பது, தார்மீகமாக ரீதியாகவும், நிதிநிலையாகவும் கேள்விக்குரியாக்கியுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த முடிவுகள், உலகளவில் ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வுகள் எச்சரிக்கின்றன.