ஆஸ்கர் விருது வழங்கும் விழா (Academy Awards), சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் ஆண்டு விழாவாகும். இதுவரை, அமெரிக்காவின் பிரபலமான ஏபிசி (ABC) தொலைக்காட்சி நிறுவனம் இந்த விழாவின் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றியிருந்தது. அந்த ஒப்பந்தம் 2028 ஆம் ஆண்டில் முடிவடையவுள்ளது.
1976 முதல் அமெரிக்காவின் பிரபல ஏபிசி (ABC) தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்து வந்த இந்த விழா, தற்போது ஆன்லைன் தளங்களின் மிகப்பெரிய போட்டி மையமாக மாறியுள்ளது. கூகுளின் வீடியோ பகிர்வுத் தளம் யூடியூப் (YouTube), Academy of Motion Picture Arts and Sciences உடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, அடுத்த ஒளிபரப்பாளர் ஆவதற்காக முயற்சி செய்து வருகிறது.
அந்த நிலையில், அடுத்த கட்ட ஒளிபரப்பு உரிமைக்கான போட்டி தொடங்கியுள்ள நிலையில், உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள யூடியூப் (YouTube) இந்தப் போட்டியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக வெளிவந்த தகவல், சினிமா ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. யூடியூப்புக்கு மிகப்பெரும் போட்டியாக Netflix, Amazon Prime Video போன்ற முன்னணி ஸ்ட்ரீமிங் சேவைகள் மற்றும் பாரம்பரிய தொலைக்காட்சி நிறுவனங்களும் உள்ளன.
ஆஸ்கர் விழா யூடியூப் தளத்தில் ஒளிபரப்பப்பட்டால், பாரம்பரிய தொலைக்காட்சிகளிலிருந்து விலகி, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு முக்கிய மாற்றம் நிகழும். இதனால், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இணையப் பயனாளர்கள், எந்தச் சாதனத்திலும் சுலபமாக விழாவைக் காணும் வசதி கிடைக்கும்.
"ஆஸ்கர் விருது விழா போன்ற பிரமாண்ட நிகழ்வுகளை யூடியூப் நேரடியாக ஒளிபரப்பத் தொடங்கினால், அது ஒளிபரப்பு துறையில் ஒரு புதிய திருப்புமுனையை உருவாக்கும். பாரம்பரிய டிவி சேனல்களின் ஆதிக்கம் குறைந்து, டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு அதிக முன்னுரிமை கிடைக்கும்" என்று நிபுணர்கள், கருத்து தெரிவிக்கின்றனர்.
இத்தகைய மாற்றம், 2029 முதல் ஆஸ்கர் விழா பாரம்பரிய தொலைக்காட்சி முறையிலிருந்து விலகி, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் வாயிலாக உலகம் முழுவதும் நடைபெறும் விதமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது ஒளிபரப்புத் துறையில் ஒரு புதிய பரபரப்பையும் அதன் முறைமைகளிலும் புதிய திருப்புமுனையையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.