யூடியூப் சேனல்களில் வெளியாகும் நேர்காணலின் போது காவல்துறை அதிகாரிகள் வழக்கு பற்றிய ரகசியம் காக்க வேண்டிய தகவல்களை பகிர வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு மேல் உள்ள பதவியில் இருக்கும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அலுவல் சம்பந்தப்பட்ட விவகாரங்கள், முக்கியமான காவல்துறை சம்பந்தப்பட்ட வேலைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பாகவும் சீருடையுடன் புகைப்படங்களையும் அவர்களது தனிப்பட்ட சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதாகவும் அதை தவிர்க்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல காவல்துறை அதிகாரிகள் தனிப்பட்ட நிகழ்ச்சியில் சீருடையுடன் கலந்து கொள்வதாகவும் அப்போது பரபரப்பான அதிகாரப்பூர்வ தகவல்களை தெரிவிப்பதாகவும் இது தொடர்பாக காவல்துறை தலைமையகம் கவனத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய பணிகள் நடத்தை விதியின் படி இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. இதுபோன்று தனிப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் யூடியூப் போன்ற சேனல்களில் பங்கேற்கும் பொழுது அது குறித்து அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அனுமதி பெற வேண்டும். மேலும் தேவைப்பட்டால் கலந்து கொள்ளக்கூடிய நிகழ்ச்சிகளில் பேசக்கூடிய அனைத்து தகவல்களையும் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று பேச வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
எங்கெங்கெல்லாம் தனக்கு மேல் உள்ள உயர் அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டுமோ அதைப் பெற்று தனிப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் பேட்டிகள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னடத்தை விதிகளை மீறி செயல்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அனைத்து அதிகாரிகளும் கண்டிப்பாக இந்த அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை அனைத்து காவல்துறை அதிகாரிகைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது