தமிழ்நாடு

சென்னையில் பரபரப்பு: தைவான் துணை தூதரகம் உட்பட 3 இடங்களுக்குத் வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் உள்ள தைவான் நாட்டின் துணைத் தூதரகம் உள்ளிட்ட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பரபரப்பு: தைவான் துணை தூதரகம் உட்பட 3 இடங்களுக்குத் வெடிகுண்டு மிரட்டல்!
Bomb threats
சென்னை தி. நகரில் உள்ள பிரபல தனியார் ஹோட்டல், ஆழ்வார்பேட்டையில் உள்ள தைவான் நாட்டின் துணைத் தூதரகம் மற்றும் அண்ணா சாலை தர்கா உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களுக்குச் இன்று வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதையடுத்து, காவல்துறை நடத்திய தீவிரச் சோதனையில் அவை அனைத்தும் புரளி என்பது தெரியவந்தது.

தனியார் ஹோட்டல் மற்றும் தூதரகத்துக்கு மிரட்டல்

தி. நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்துத் தகவல் அறிந்த பாண்டி பஜார் போலீசார், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் அது ஒரு புரளி என்று தெரிய வந்ததையடுத்து, பாண்டி பஜார் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் செயல்பட்டு வரும் தைவான் நாட்டின் துணைத் தூதரகத்துக்கும் மின்னஞ்சல் (இமெயில்) மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அபிராமபுரம் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டதில், இந்த மிரட்டலும் புரளி என்று தெரிய வந்தது. மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணா சாலை தர்காவுக்கு மிரட்டல்

இதேபோல், அண்ணா சாலையில் உள்ள தர்காவுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சிந்தாதிரிப்பேட்டை போலீசார் அங்குச் சோதனை நடத்தியதில், இதுவும் புரளி என்று உறுதிப்படுத்தப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அண்ணா சாலை தர்காவுக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் மிரட்டல்கள் குறித்துச் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்

கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் உள்ள பல்வேறு முக்கிய இடங்கள் மற்றும் பிரமுகர்களுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதில், ஆளுநர் மாளிகை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லம், நடிகர் எஸ்.வி. சேகர், முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் மிரட்டல்கள் குறித்து போலீசாரை தீவிர விசாரணைக்கு மேற்கொண்டு வருகின்றனர்.