கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலையில், இன்று ஒரே நாளில் பெரும் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. காலையில் சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்திருந்த நிலையில், மாலையில் ரூ.1,440 குறைந்து தங்கம் விற்பனையாகிறது.
தொடர் உயர்வால் புதிய உச்சம்
கடந்த அக்டோபர் 8-ஆம் தேதியே ஒரு பவுன் தங்கம் ரூ.90,000ஐத் தாண்டிய நிலையில், அதன் பின்னர் தினமும் புதிய உச்சத்திலேயே விலை பயணித்து வந்தது. ஆனால், தீபாவளிப் பண்டிகை நாளான நேற்று (அக்டோபர் 20) தங்கம் விலை எதிர்பாராத விதமாகக் குறைந்தது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.11,920க்கும், ஒரு சவரன் ரூ.640 குறைந்து ரூ.95,360க்கும் விற்பனையானது.
இன்று காலை அதிரடி உயர்வு, மாலையில் சரிவு
நேற்றைய சரிவுக்குப் பிறகு, சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,080 அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.97,440க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.260 உயர்ந்து ரூ.12,180க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், பிற்பகல் நிலவரப்படி, தங்கம் விலையில் சற்று சரிவு ஏற்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை உயர்ந்ததில் இருந்து சவரனுக்கு ரூ.1,440 குறைந்து, ஒரு சவரன் ரூ.96,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.180 குறைந்த நிலையில், ஒரு கிராம் தங்கம் ரூ.12,000க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தைப் போலவே, வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.6 குறைந்து ரூ.182க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,88,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலையில் ஏற்படும் இந்தத் தொடர்ச்சியான மற்றும் திடீர் ஏற்ற இறக்கத்திற்குக் காரணமாக, சர்வதேசச் சந்தை மாற்றங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்களே இருக்கின்றன என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.