தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள் மற்றும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
அதிகபட்ச மழைப்பதிவு
கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தங்கச்சிமடத்தில் அதிகபட்சமாக 17 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. பாம்பன் பகுதியில் 5 செ.மீ., மண்டபம் பகுதியில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், அதன் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களுடன் அவர் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அதிக மழை பெய்துள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களிடம், அங்கு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மழை பாதிப்புகள் குறித்துக் கேட்டறிந்தார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை விரைந்து செய்து கொடுக்கவும் அவர் அறிவுறுத்தினார். இந்த ஆலோசனையில் பேரிடர் மேலாண்மை நிர்வாகிகள் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரும் பங்கேற்றனர்.