தொடர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று காலை கணிசமான சரிவைச் சந்தித்த நிலையில், மாலையில் மீண்டும் விலை உயர்வைக் கண்டுள்ளது.
காலை விலை சரிவு
இந்த ஆண்டின் தொடக்கத்தில் (ஜனவரி 1) ஒரு சவரன் தங்கம் ரூ. 57,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக உயர்ந்து, நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன் ரூ. 97,600 என்ற வரலாறு காணாத விலையில் விற்பனையானது. மேலும், இந்த அக்டோபர் மாதத்தின் 17 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 10,000 வரை அதிகரித்திருந்தது.
இந்தச் சூழலில், இன்று காலை நேரத்தில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 250 குறைந்து, ஒரு கிராம் ரூ. 11,950-க்கும், சவரனுக்கு ரூ. 2,000 குறைந்து, ஒரு சவரன் ரூ. 95,600-க்கும் விற்பனையானது. இந்த விலை சரிவு தங்கம் வாங்கக் காத்திருந்த மக்களுக்குச் சிறிது மகிழ்ச்சியை அளித்தது.
மாலையில் மீண்டும் விலை ஏற்றம்
இருப்பினும், காலையில் சவரனுக்கு ரூ. 2,000 குறைந்த நிலையில், மாலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 அதிகரித்துள்ளது. இதனால், கிராமுக்கு ரூ. 250 குறைந்திருந்த நிலையில், தற்போது ரூ. 50 உயர்ந்துள்ளது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை
வெள்ளியின் விலை இன்று காலை கணிசமாகக் குறைந்தது . இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 13 குறைந்து, ரூ. 190-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ. 13,000 குறைந்து, ரூ. 1 லட்சத்து 90 ஆயிரம்-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாலையில் மாற்றமின்று அதே விலையில் விற்பனையாகிறது.
சர்வதேசச் சந்தை மாற்றங்கள், டாலரின் மதிப்பு மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்களே இந்தக் தொடர் விலை ஏற்ற இறக்கத்திற்குக் காரணம் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.