தமிழ்நாடு

75 வயது மாமியாரிடம் அத்துமீறிய மருமகன்-கோவையில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்

75 வயது மாமியாரை மருமகன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

75 வயது மாமியாரிடம் அத்துமீறிய மருமகன்-கோவையில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்
புகார் குறித்து கோவை மத்திய மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்( 51). இவரது மனைவி இறந்துவிட்டார். இவருக்கு இளம் வயதில் மகன் உள்ளார். இவர்களது வீட்டிலேயே மணிகண்டனின் மாமியாரும் வசித்து வருகிறார்.

மாமியாரிடம் தவறாக நடக்க முயற்சி

75 வயதான அவர் மருமகன் மற்றும் பேரனுக்கு சமைத்து கொடுத்து வந்துள்ளார். மகள் இல்லாத நிலையில் மருமகனை மகனாக நினைத்து சமைத்து கொடுத்து கவனித்து வந்துள்ளார்.இந்த நிலையில் குடிப்பழக்கம் உடைய மணிகண்டன் நேற்று இரவு வீட்டிற்கு போதையில் வந்துள்ளார்.இரவில் அனைவரும் அவரவர் அறையில் படுத்து தூங்கியுள்ளனர்.

அப்போது நள்ளிரவில் திடீரென்று போதையில் இருந்த மருமகன் மணிகண்டன், தனியாக அறைக்கு சென்றுள்ளார். அங்கு அறையில் தனியாக படுத்திருந்த 75 வயது மாமியார் என்றும் பாராமல் அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டுள்ளார்.அப்போது வேறொரு அறையில் தூங்கிக்கொண்டிருந்த பாட்டியின் பேரன் திடுக்கிட்டு விழித்தார்.

தந்தையை அடித்து தரத்திய மகன்

பாட்டி தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்தபோது நிலைமையை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார். உடனே ஆத்திரத்தில் தந்தையை சரமாரியாக தாக்கினார். இதில் மணிகண்டன் காயம் அடைந்தார்.அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அனைத்து கோவை மத்திய மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மகன் போல பார்த்துக்கொண்ட மாமியாரிடம் மருமகன் தவறாக நடக்க முயன்றது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.