தமிழ்நாடு

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை: பாஜகவினர் கொட்டும் மழையில் பேரணி!

ஆப்ரேஷன் சிந்தூர் போர் வெற்றியை கொண்டாடும் வகையில் போரில் ஈடுபட்ட ராணுவத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் நடிகை நமீதா கொட்டும் மழையில் தேசிய கொடியை ஏந்தி பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டனர்.

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை: பாஜகவினர் கொட்டும் மழையில் பேரணி!
ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை: பாஜகவினர் கொட்டும் மழையில் பேரணி!
இந்தியா, பாகிஸ்தான் போரில் ஈடுபட்ட ராணுவம்,ராணுவ வீரர்கள்,முப்படை தளபதிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அம்பத்தூரில் தேசிய கொடி ஏந்தி அம்பத்தூர் ராக்கி திரையரங்கத்தில் இருந்து ஒரக்கடம் அம்பேத்கர் சிலை வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலம் நடைபெற்றது.

திடீரென மழை பெய்ததால், மழையில் நனைந்தபடியே நடைபெறும் பேரணியில் பங்கேற்றனர். பேரணியில் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில துணை தலைவர் கரு.நாகராஜ், மாநில மகளிரணி தலைவர் உமா ரதிராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் நடிகை நமிதா முன்னாள் ராணுவத்தினர் பெண்கள், பாஜக நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று வந்தே மாதரம் என்ற கோஷத்துடன் ஊர்வலமாக சென்றனர்.

பேரணிக்கு பின்னர், முன்னாள் ஆளுநரும், முன்னாள் பாஜக மாநில தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, சென்னை வியாசர்பாடி பகுதியில் நடைபெற்ற தீ விபத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்ய விடாமல் காவல்துறையினர் தடுத்துள்ளனர். இதனை கண்டித்து தவெக தலைவர் விஜய் பாசிச ஆட்சி என விமர்சனம் செய்துள்ளார்.

இது முதல் முறை இல்ல நாங்கள் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து வாங்கும் பொழுது எங்களை 3 மணி நேரம் வெயிலில் நிற்க வைத்திருந்தனர். திமுகவிற்கு ஒரு பயம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் என்ன நடவடிக்கைகளை எடுத்தாலும் போராட்டங்களை அறிவித்தாலும் அதற்கு தடை விதிக்கிறார்கள் இது கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சிகள் எதை செய்தாலும் அவர்களுக்கு பதற்றம் ஏற்படுகிறது தங்கள் ஆட்சியைப் பற்றி பொது மக்களுக்கு எதிர்க்கட்சிகள் தெரிவித்து விடுவார்கள் என்ற பயமும் அவர்களுக்கு இருக்கிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதட்டத்தில் இருக்கிறார்.

டெல்லி செல்லும் போதும் அந்த பதற்றம் இருந்தது திரும்பி வரும் பொழுதும் அந்த பதற்றம் இருந்தது.
டாஸ்மார்க் முறைகேடு பற்றி மதுரை உயர்நீதிமன்றம் ஏதோ நடந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்கள். டாஸ்மாக் முறைகேடுகள் பற்றி பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்த ஊழியர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். ஊழல் செய்தவர்களை விட்டுவிட்டு ஊழல் குறித்து தெரிவித்தவர்களை பணியில் இருந்து நீக்கி உள்ளார்கள். டாஸ்மாக் வழக்கில் விடுமுறைக்காக உச்சநீதிமன்றம் இடைக்கால தடையை விடுத்துள்ளது.

டாஸ்மாக்கில் ஊழலே இல்லாமல் வெளி வந்தது போல் நாடகம் ஆடிக் கொண்டு உள்ளார்கள். உலகமே இந்தியாவை பாராட்டுகிறது. ஆனால், ராகுல் காந்தி பிரதமருக்கு எதிராக பேசுகிறார். அவருக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தீவிரவாத தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடைபெற்றது. போரில் நம்முடைய ராணுவ தடவாளங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சீனா ராணுவ தடவாளங்கள் பயனற்றது என இந்த போர் நமக்கு நினைவுபடுத்தி உள்ளது என தெரிவித்தார்.