அமைச்சரவை மாற்றம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் துரைமுருகன் மற்றும் அமைச்சர் ரகுபதி ஆகியோரின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நீர்வளத்துறை அமைச்சர் பொறுப்புடன் கூடுதலாக அமைச்சர் துரைமுருகன் சட்டத்துறையையும் கவனிப்பார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதி இனி கனிம மற்றும் சுங்கத்துறை அமைச்சர் பொறுப்பை மட்டும் கவனிப்பார் என்று தமிழக ஆளுநர் அறிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம் ஏன் செய்யப்பட்டது என்று அரசியல் வட்டாரங்களில் கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் நேற்று முன் தினம் மட்டும் அடுத்தடுத்து நடந்த கொலைகளால் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பி உள்ளன. குறிப்பாக தஞ்சாவூரில் பாஜக முன்னாள் நிர்வாகி தலைவெட்டிக்கொலை செய்யப்பட்டது. புதுக்கோட்டையில் இரு சமூகங்களுக்கு இடையே நடந்த மோதல் உள்ளிட்டவற்றால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கின் நிலை குறித்தும் கடும் விமர்சனத்தை வைத்துள்ளன.
மருத்துவமனையில் அனுமதி
இதேபோல் கடந்த ஏப்ரல் 27ம் தேதி தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. அமைச்சராக இருந்த பொன்முடி சைவம்,வைணவம் குறித்த சர்ச்சை பேச்சால் திமுக துணைப்பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. மேலும் அமைச்சர் பொறுப்பும் பறிக்கப்பட்டு அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் கெடுபிடியால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார் செந்தில்பாலாஜி. இதனைத்தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் நீக்கப்பட்டனர். இந்த நிலையில், இன்று மூத்த அமைச்சரான துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு குறித்து துரைமுருகன் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வார் என கூறப்படுகிறது.
சட்டத்துறை அமைச்சராக துரைமுருகன் நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளரா அல்லது உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளரா என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.