தென்னகத்தின் பெருமைமிகு நகரமான மதுரை, விரைவில் நடைபெறவிருக்கும் பிரமாண்ட மாநாட்டிற்காக தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கின்றனர் தவெகவினர். பல நாட்களாக உறங்கிக் கிடந்த மைதானம், இப்போது பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் தொழிலாளர்கள், பொறியாளர்கள் என மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
தவெக மதுரை மாநாடு
தவெக மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதை உறுதி செய்ய, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் இன்று நேரில் பார்வையிட்டார். மாநாட்டுப் பணிகளின் முன்னேற்றம் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். குறிப்பாக, பார்வையாளர்கள் வசதிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேட்டார். இது வெறும் மாநாடு மட்டுமல்ல, நம் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் உலகிற்கு பறைசாற்றும் ஒரு திருவிழா. எனவே, ஒவ்வொரு அம்சத்திலும் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
மேலும், மாநாட்டிற்கு வரும் பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வண்ணம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு அறிவுறுத்தினார். மதுரை மாநகரின் வளர்ச்சிக்கும், மக்களின் ஒற்றுமைக்கும் இந்த மாநாடு ஒரு புதிய பாதையை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டின் மூலம் கிடைக்கும் அனுபவங்களும், புதிய சிந்தனைகளும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.
தவெகவினர் எதிர்பார்ப்பு
இந்த மாநாடு, மதுரையின் பெருமையை உலகறியச் செய்யும் ஒரு வாய்ப்பாக அமையும் என தவெகவினரால் கூறப்படுகிறது. மாநாடு வெற்றிகரமாக நடைபெற அனைத்து மதுரை மக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தவெகவினரால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நாளை அக்கட்சித் தலைவர் விஜய் வெளியிடுகிறார். பனையூர் தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறவுள்ள தவெக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இந்த செயலியை வெளியிடுகிறார். இதனால் தேர்தலுக்கான பணிகளில் தவெக மும்முரமாக இறங்கி உள்ளது.