புதிய ஜிஎஸ்டி 2.0 வரி விகிதங்களின்படி, 5% மற்றும் 18% என இரு வரி அடுக்குகள் மட்டுமே அமலில் இருக்கும். இதற்கு முன்பு 12 சதவீத வரி அடுக்கில் இருந்த 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி வரம்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால், அத்தியாவசியப் பொருட்கள், வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் உள்ளிட்டவை கணிசமாகக் குறையும்.
கோவை தெற்குத் தொகுதியில் உள்ள டீக்கடைகள் மற்றும் உணவுப் பொருள் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்குச் சென்று வானதி சீனிவாசன் ஆய்வு செய்தார். அப்போது, வியாபாரிகள் கூறுகையில், "அரசு அறிவித்த ஜிஎஸ்டி வரிக்குறைப்புபடி இனிப்பு மற்றும் கார வகைகளின் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். புதிய விலை ரசீதுகள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன" என்று தெரிவித்தனர்.
ஒரு உணவுப் பொருள் விற்பனையாளர், முதலில் விலை அதிகமாக இருந்ததாகவும், தற்போது வாடிக்கையாளர்கள் சந்தோஷமாக வாங்கி செல்லும் பொழுது, நாங்களும் மன நிறைவுடன் இருப்பதா மகிழ்ச்சி தெரிவித்தார். இதற்கு, இதைக் குறைத்த பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றியை கூறுங்கள் என்று வானதி சீனிவாசன் கூறினார்.
மக்களின் மனநிலை:
வரிக்குறைப்பால் மக்கள் ஒரு பொருளுக்குப் பதிலாக இரண்டு பொருள்கள் கூடுதலாக வாங்குவார்கள் என்றும், இதனால் அரசுக்கு வரி வருவாய் குறைந்தாலும் மக்கள் அதிக பயன் பெறுவார்கள் என்றும் வானதி சீனிவாசன் கூறினார். இருசக்கர வாகனம் வாங்கச் சென்ற ஒரு வாடிக்கையாளர், ஷோரூமில் ஜிஎஸ்டி வரி குறைந்ததும் வாங்கிக்கொள்ளும்படி கூறினார்கள். இப்போது பொருட்களின் விலை குறைந்திருப்பதால் கூடுதல் பொருட்களை வாங்கியுள்ளேன்" எனத் தெரிவித்தார்.
காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் பேசிய பொதுமக்கள், டீ, காபி விலை குறைந்துள்ளது. ஆனால், முதல் நாள் என்பதால் மக்களிடையே இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்றனர். அதற்கு, வானதி சீனிவாசன், பிரதமரின் ஒரே நோக்கம், இந்த விலை குறைப்பு சாதாரண மக்களிடம் சென்றடைய வேண்டும். எவ்வளவு குறைக்கப்பட்டு உள்ளது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.