நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் குஜராத் போலீஸாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பெண் ஐ.டி. ஊழியர் ரினே ஜோஸ்லிடா, தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது முன்னாள் கணவரைப் பழிவாங்கும் நோக்கில் இந்த மிரட்டல்களை விடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூன் 24-ஆம் தேதி, அகமதாபாத் போலீஸாரால் சென்னை கே.கே. நகரில் வைத்து ரினே ஜோஸ்லிடா கைது செய்யப்பட்டார். டெல்லி, அகமதாபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநில விமான நிலையங்களுக்கு 21 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்குகள் தொடர்பாக அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், நரேந்திர மோடி மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கும் அவர் மீது இருந்தது.
இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சென்னையில் விடுக்கப்பட்டு வந்த தொடர் வெடிகுண்டு மிரட்டல் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ரினே ஜோஸ்லிடா தனது முன்னாள் கணவரான திவிச் பிரபாகர் பெயரில் ரகசிய குறியீட்டைப் பயன்படுத்தி மூன்று முறை சென்னை விமான நிலையத்திற்கு டார்க் வெப் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, குஜராத் சென்ற சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அங்குச் சிறையில் இருந்த ரினே ஜோஸ்லிடாவிடம் ஐந்து நாட்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தனது முன்னாள் கணவனைப் பழிவாங்கும் நோக்கத்துடனே குஜராத்திலிருந்து பணி மாற்றலாகி சென்னை வந்ததாகவும், அதன் பின்னர் மிரட்டல் விடுத்ததாகவும் ரினே ஜோஸ்லிடா ஒப்புக்கொண்டார். பெங்களூரு, ஹைதராபாத், குஜராத், தமிழ்நாடு, டெல்லியென நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 10 வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.