இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், நடிகர் குமரன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'குமார சம்பவம்'. வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பாலாஜி வேணுகோபால், தயாரிப்பாளர் கணேஷ் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டு பட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இயக்குநர் பாலாஜி வேணுகோபால் பேச்சு:
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கணேஷுக்கு முதலில் நன்றி. இவர் இடது கைப்பழக்கம் உள்ளவர் என்பதால், முடிவுகளை வேகமாக எடுத்து, எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார். இதன் காரணமாகவே படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. மேலும், படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் சரியான நேரத்தில் ஊதியத்தை வழங்கி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
இந்தப் படத்தில் இடம்பெறும் அனைத்து எழுத்து வடிவங்களையும் நானே உருவாக்கினேன். இது பேராசைதான். ஆனால், ரசிகர்களுக்குத் தரமான பொழுதுபோக்கைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இதன் பின்னணியில் இருந்தது. என்னுடைய தாத்தா, பாட்டி காலத்திலிருந்து, 2கே கிட்ஸ் வரை அனைவரும் சோர்ந்துபோகும் தருணத்தில் உத்வேகம் பெறும் வகையில் பாடல்களை உருவாக்கினோம். இந்தப் படத்தில் இடம்பெறும் ஆறு பாடல்களையும் பாரதியார், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா. முத்துக்குமார், அசல் கோளாறு, பால் டப்பா ஆகியோருக்குச் சமர்ப்பணம் செய்வதற்காக எழுதினேன்.
‘லக்கி மேன்' படத்திற்கு முதலில் நான் வைத்த பெயர் 'கந்தன் கருணை'. அந்த டைட்டில் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இந்தத் திரைப்படத்தில் கடவுளின் அனுகிரகம் இருந்தது. இந்தப்படத்தில் கதாநாயகன் பெயர் குமரன், படத்திற்குத் டைட்டில் குமாரசம்பவம், ஜி எம் குமார், குமரவேல், பால சரவணன் எனப் பல முருகப் பக்தர்களின் பெயர்கள் படத்துடன் இணைந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
தயாரிப்பாளர் கணேஷ் பேச்சு:
எங்கள் வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனத்தின் இரண்டாவது படைப்பு தான் 'குமார சம்பவம்'. எங்களின் முதல் படைப்பான 'யாத்திசை' திரைப்படம் வெற்றி பெற்றதற்கு முழுமுதற் காரணம் ஊடகங்கள் தான். இதற்காக மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
'யாத்திசை' படத்தைப் போலவே, இந்த 'குமார சம்பவம்' படத்திற்கும் மக்களின் பேராதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். ஏனெனில், இது ஒரு தரமான ஃபேமிலி என்டர்டெய்னர். 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் நடித்து வந்த குமரன், நிச்சயம் திரைப்படத்தில் நடிப்பேன் என நான் கொடுத்த வாக்குறுதியை இந்தப் படத்தின் மூலம் நிறைவேற்றி விட்டேன். இந்தப் படம் பெரிய அளவில் வெற்றிபெற வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்,'' என்றார்.