தமிழ்நாடு

80கள், 90கள் நட்சத்திரங்கள் ரீயூனியன்: சென்னையில் இந்திய நடிகர்கள் சங்கமம் - சிரஞ்சீவி உணர்ச்சிப்பூர்வமான பதிவு!

தமிழ், தெலுங்கு, இந்தி உட்படப் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 1980கள் மற்றும் 90களின் 31 முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் நட்பைக் கொண்டாட நேற்று (அக். 4) சென்னையில் 'நட்சத்திர ரீயூனியனில்' ஒன்று கூடினர். சிரஞ்சீவி, சரத்குமார், குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தச் சந்திப்பின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

80கள், 90கள் நட்சத்திரங்கள் ரீயூனியன்: சென்னையில் இந்திய நடிகர்கள் சங்கமம் - சிரஞ்சீவி உணர்ச்சிப்பூர்வமான பதிவு!
80கள் 90கள் நட்சத்திரங்கள் ரீயூனியன்
இந்திய சினிமாவின் 1980கள் மற்றும் 1990கள் காலகட்டத்தில் முன்னணி வகித்த பான் இந்திய நடிகர்கள் மற்றும் நடிகைகள் நேற்று (அக்டோபர் 4, 2025) சென்னையில் ஒன்று கூடி, தங்களது பழைய நினைவுகளையும், நட்பையும் கொண்டாடினர். இந்தக் 'நட்சத்திர ரீயூனியன்' நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

சென்னையில் திரண்ட பான் இந்திய நண்பர்கள்

பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்கள் பல வருடங்களுக்குப் பிறகு ஒன்று கூடி நினைவுகளைப் பகிர்வதுபோல, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த பிரபலங்கள் இந்த நிகழ்வில் சங்கமித்தனர். இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடைகளை அணிந்திருந்தது, இந்தச் சந்திப்பின் சிறப்பம்சமாக அமைந்தது.

இந்த ரீயூனியனில் கலந்துகொண்ட முக்கியப் பிரபலங்கள்:

நடிகர்கள்: சிரஞ்சீவி, சரத்குமார், வெங்கடேஷ், ஜாக்கி ஷெராஃப், பாக்யராஜ், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ராஜ்குமார் சேதுபதி.

நடிகைகள்: ரம்யா கிருஷ்ணன், ஜெயசுதா, குஷ்பூ, சுஹாசினி, லிஸ்ஸி, ரேவதி, நதியா, ராதா, சுமலதா, ஸ்ரீப்ரியா, பூர்ணிமா பாக்யராஜ், மீனா, சரிதா, அஸ்வதி ஜெயராம்.

மொத்தம் 31 நட்சத்திரங்கள் இந்த நெகிழ்ச்சியான நிகழ்வில் பங்கேற்றனர்.

சிரஞ்சீவியின் உணர்ச்சிப்பூர்வமான பதிவு

சந்திப்புக் குறித்துப் பேசிய நடிகர் சிரஞ்சீவி, தனது உணர்ச்சிப்பூர்வமான அன்பைப் பதிவு செய்துள்ளார். 80ஸ் காலகட்டத்தில் எனது அன்புக்குரிய நண்பர்கள் ஒவ்வொருவருடனுமான எனது சந்திப்பு, சிரிப்பு, பாசம் மற்றும் நினைவுகள் என அனைத்தையும் பகிர்ந்துகொண்ட, அது பிரிந்திருக்க முடியாத பிணைப்பால் இணைந்த ஒரு நினைவுப் பாதைக்கான நடைபயணம். எத்தனை அழகான நினைவுகள் இருந்தாலும், ஒவ்வொரு சந்திப்பையும் முதல் சந்திப்பு போல உணர்கிறேன். சினிமாவில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட வாழ்வில் பல ஆண்டுகளாகத் தொடரும் இவர்களது இந்த நட்பு, திரையுலக ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.