இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உள்ள கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன் விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக அவர், சிறப்பாக செயல்பட்டாலும், தொடர்ந்து அவருக்கான இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
கேரள கிரிக்கெட் சங்கம் சஞ்சு சாம்சனை விஜய் ஹசாரே தொடரில் விளையாட வைக்கவில்லை. இதில் விளையாடியிருந்தால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நிச்சயம் இடம் பிடித்திருப்பார் என ஸ்ரீசாந்த் தெரிவித்தார்.
இதுபோன்று, கேரள கிரிக்கெட் சங்கத்திற்கு எதிராக தவறான, உண்மைக்கு புறம்பான கருத்துகளையும் மற்றும் அவதூறான அறிக்கைகளையும் வெளியிட்டதால், கேரள கிரிக்கெட் சங்கம் (KCA) முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் எஸ். ஸ்ரீசாந்தை மூன்று ஆண்டுகள் இடைநீக்கம் செய்து அறிவிப்பு வெளியிட்டது.
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக இருப்பேன், கேரள மாநில வீரர்களை பாதுகாப்பேன் என தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 30 அன்று கொச்சியில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கேசிஏ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஸ்ரீசாந்த் தற்போது கேரள கிரிக்கெட் லீக்கில் ஒரு உரிமையாளர் அணியான கொல்லம் ஏரிஸின் இணை உரிமையாளராக உள்ளார். முன்னதாக, அவரது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பாக, ஸ்ரீசாந்த் மற்றும் கொல்லம் ஏரிஸ், ஆலப்புழா டீம் லீட் மற்றும் ஆலப்புழா ரிப்பிள்ஸ் ஆகிய அணிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அவர்கள் அனுப்பியுள்ள நோட்டீஸில், விளையாட்டு உரிமையாளர் அணிகள் அறிவிப்புகளுக்கு திருப்திகரமான பதில்களை அளித்ததால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. ஆனால், அணி நிர்வாகத்திற்கு உறுப்பினர்களை நியமிக்கும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஆலோசனை வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சஞ்சு சாம்சனின் பெயரைப் பயன்படுத்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் கூறியதற்காக, சாம்சனின் தந்தை சாம்சன் விஸ்வநாத் மற்றும் இரண்டு பேருக்கு எதிராக இழப்பீடு கோரவும் பொதுக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக பேசியதற்காக நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என்றும், சங்கத்திற்கு எதிராக தவறாக வழிநடத்தும் மற்றும் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கேசிஏ ஒரு அறிக்கையில் விரிவாக கேரள கிரிக்கெட் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.