தமிழ்நாடு முழுவதும் உள்ளம் தேடி, இல்லம் நாடி பிரச்சாரப் பயணத்தை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக, நேற்று திருவாரூரில் அவர் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உருவப்படத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முரசு அடித்து ரத யாத்திரை
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த யாத்திரையில், விஜயகாந்த் உருவச்சிலை வைக்கப்பட்ட ரதயாத்திரை வாகனத்துடன் கடைவீதி வழியாகப் பிரேமலதா நடைபயணம் மேற்கொண்டார். பொதுமக்களின் உற்சாகமான வரவேற்புக்கு மத்தியில், அவரே கையில் முரசு ஒன்றை எடுத்து அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது, ஒரு ரசிகர் அளித்த விஜயகாந்தின் புகைப்படத்திற்கு அவர் அன்பு முத்தம் கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
'2026 தேமுதிகவின் காலம்..'
இதனைத்தொடர்ந்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், “இந்த பயணத்தில் திருவாரூர் மாவட்ட மக்களைச் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கலைஞர் பிறந்த திருவாரூரில் தியாகராஜர் கோயிலின் தேர் புகழ்பெற்றது. இங்குள்ள மக்கள் நிறைய கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். வரும் 2026-ஆம் ஆண்டுத் தேர்தல் தேமுதிகவுக்கான தேர்தலாக அமையும்.
மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம். நிச்சயம், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். 2026-ல் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கிறதோ, அந்தக் கூட்டணியினர் தான் ஆட்சியமைப்பார்கள். தேமுதிக இல்லாமல் எந்தக் கட்சியும் இல்லை என்பதை வருகின்ற தேர்தலில் நிரூபிப்போம். நமது முரசு வெற்றி முரசாகும்" என்றார்.
யார் யாருக்கு கிரகணம் பிடிக்கப்போகிறது?
தொடர்ந்து பேசிய அவர், "இப்போது கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது. இன்றிலிருந்து (சந்திர கிரகணம்) யார் யாருக்கு கிரகணம் பிடிக்கப்போகிறது, யார் யாருக்கு ஒளிமயமாக இருக்கப்போகிறது என்பதை பார்க்கலாம். ஜனவரியில் நடைபெறும் நமது கட்சியின் மாநாட்டிற்கு அனைவரும் வர வேண்டும். அதன் வாயிலாக மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குவோம்" என்று தெரிவித்தார்.