விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு மற்றும் சட்டமன்ற தேர்தல் பரப்புரை கூட்டம் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதிய தமிழகம் கட்சி தொடங்கியதில் இருந்து மதுவுக்கு எதிரான பரப்புரை செய்து வருகிறோம். ஆனால் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் கள்ளுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். கள்ளுக்கு ஆதரவு தெரிவித்தால், இளைஞர்கள் அதோடு சேர்த்து கஞ்சா, சாராயம் போன்ற போதை பொருட்களை பயன்படுத்த தொடங்கி விடுவார்கள்.
இது போன்ற அரசியல் கட்சிகள் பொறுப்பற்ற முறையில் செய்யும் பிரச்சாரம் காரணமாகத்தான் இளைஞர்கள் போதைக்கு பலியாகிறார்கள். எனவே இது போன்ற அரசியல் கட்சிகளை தடை செய்தால்தான் மக்கள் மத்தியில் போதைப்பழக்கம் இல்லாமல் போகும். தமிழகத்தில் டாஸ்மாக் திறந்த பின் கலாச்சார சீரழிவு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்நாள் குறைக்கப்பட்டுள்ளது. ஈரல், இதயம், மூளை போன்ற உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்” என்றார்.
ஆட்சியில் பங்கு குறித்த கேள்விக்கு, “குழப்பமற்ற நிலைக்குத்தான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கேட்கிறோம். ஒரு கட்சி ஆட்சியில் இருந்தால் சர்வாதிகாரப் போக்குடன் கனிம வளங்களை கொள்ளையடிக்கிறார்கள். யாரும் தட்டி கேட்க இயலவில்லை. அமைச்சர்கள் எடுக்கும் முடிவு மற்றவர்களுக்கு தெரிவதில்லை. கூட்டணி கட்சிகள் அமைச்சரவையில் இணையும்போதுதான் ஆளும் கட்சிக்கு கடிவாளம் போட முடியும்.
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி மலரவும் அரசின் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக கொண்டு செலவும் கூட்டணி ஆட்சி அவசியம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “காவல்துறை தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. மேலிருந்து கீழ் வரை ஊழல் மலிந்து போயிருப்பதால் எந்த அதிகாரியும் மேலதிகாரிக்கு கட்டுப்படுவதில்லை.
பிற நாடுகளில் பட்டாசு தொழில் பாதுகாப்புடன் செயல்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் ஏன் அந்த நிலை இல்லை. ஏனென்றால் அதிகாரிகளின் ஊழல் காரணமாக விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க முன்வராத காரணத்தால் லஞ்சம் பெற்றுக்கொண்டு கண்டும் காணாமல் இருப்பதால் பட்டாசு விபத்துக்கள் நடைபெறுகிறது. விபத்துக்கள் அனைத்தும் தடுக்கப்படக் கூடியது. அதிகாரிகள் ஊழலை தவிர்த்தால் சிவகாசியில் பட்டாசு வெடி விபத்துக்கள் நேராமல் தடுக்கலாம்” என தெரிவித்தார்.