டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை உடனடியாகக் கொள்முதல் செய்யாதது மற்றும் கொள்முதல் நிலையங்களில் உள்ள குளறுபடிகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். விவசாயிகளின் இந்தத் துயரம் அவர்களுக்குக் கண்ணீர் தீபாவளியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறுவை சாகுபடி மழையால் பாதிப்பு
டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை சாகுபடி அறுவடை முழு வீச்சில் நடந்து வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காகக் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைத்துள்ளனர். ஆனால், கொள்முதல் நிலையங்களில் லாரிகள் முறையாக இயக்கப்படாததால், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன.
அதேபோல், தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையால், தற்போதுள்ள சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிப் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. நெல்லை உடனடியாகக் கொள்முதல் செய்யாததால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நெல்லில் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் 22 சதவீதம் வரை ஈரப்பதத்துடன் நெல்லைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
நேரில் ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி
இந்தச் சூழ்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தஞ்சாவூர் அருகே உள்ள காட்டூர் மற்றும் மூர்த்தியம்பாள்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குச் சென்றார். அங்குத் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளையும், நெல் கொள்முதல் செய்வதில் உள்ள குறைபாடுகளையும் அவர் நேரில் பார்வையிட்டார். மேலும், மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அரசின் மீது குற்றச்சாட்டு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் துயரத்தை துடைக்கத் தமிழக அரசுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வலியுறுத்துவதாகக் கூறினார்.
மேலும் அவர், "நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு நாளைக்கு 2,000 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால், நான் நேரடியாக விவசாயிகளிடம் விசாரித்தபோது, வெறும் 800 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகத் தெரிவித்தனர். இதன் மூலம், தமிழக அரசு தவறான தகவலைக் கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது என்பது தெளிவாகிறது.
நானும் ஒரு விவசாயி என்பதால், விவசாயிகள் படும் கஷ்டங்கள் எனக்கு அனைத்தும் தெரியும். விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க நான் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். விவசாயிகளுக்கு இந்தத் தீபாவளி கண்ணீர் தீபாவளியாகத்தான் உள்ளது" என்று தெரிவித்தார்.

LIVE 24 X 7